#1207 - *தந்தையின் பாவத்தை பிள்ளை சுமப்பதில்லை என்று தேவன் சொல்லியிருக்க, உரியாவின் மனைவியாகிய பத்சேபாளிடம் தாவீது பெற்ற குழந்தையை தேவன் ஏன் அடித்தார்? 2சாமு. 12:15*
*பதில்* : அவரவர் செய்த பாவத்தின் கணக்கை அவரவர்களே கொடுக்கிறார்கள். நியாயத்தீர்ப்பு என்பது அந்தந்த மனிதர்களின் மீது உள்ளது. தகப்பன் செய்த கொலைக்கு பிள்ளையை எந்த நீதிமன்றமும் சிறைச்சாலைக்கு அனுப்புவதில்லை.
மேலும், தகப்பனின் / அல்லது பெற்றோரின் தவறுகளால் பிள்ளைகள் இவ்வுலகில் அவதிப்படுவது அவர்களது உலக காரியத்தின் தவறுகளின் விளைவு. எடுத்துக்காட்டாக, ஆதாம் ஏவாளின் தவறு – நாம் அனைவரும் சரீர மரணத்திற்குள்ளாக்கப்பட்டது,சிரமப்பட்டு உழைத்தே சம்பாதிக்கவேண்டிது போன்றவை !!
பெற்றோரின் தவறான பழக்கத்தால் வயிற்றில் வளரும் குழந்தை அந்த விளைவுடன் பிறப்பதை நாம் காண்கிறோம். பிறக்கும் குழந்தையின் அவல நிலை அல்லது உடல் ஊனம் போன்றவை குழந்தையின் பாவத்தால் அல்ல, மற்றவர்களின் பாவத்தால் ஏற்பட்டது. ஆகவே, எல்லா பிரச்சனைகளுக்கும் தனிப்பட்ட பாவங்கள் காரணம் என்று சொல்வது தவறு.
நீங்கள் குறிப்பிடும் இச்சம்பவத்தில் தாவீது பத்சேபாளுடன் விபச்சாரம் செய்து, பின்னர் அதை ஒரு கொலை மூலம் மறைக்க முயன்றபோது, விளைவு என்னவென்றால், பத்சேபாளால் கருத்தரிக்கப்பட்ட குழந்தை இறக்கிறது.
தாவீது தனது பாவத்தை மன்னிக்க தேவனிடம் வேண்டியிருந்தும், தேவன் அதை மன்னித்திருந்தும், அதன் விளைவை சந்தித்தார். “…நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார். *ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால்*, உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.” 2சாமு. 12:13-14
குழந்தையின் நிமித்தம் தாவீதுக்கு துக்கம் வருகிறது. மேலும், அந்தக் குழந்தை வாழ்ந்திருந்தால், எதிரிகள் அவதூறாகப் பேசுவதற்கு அது காரணமாகும். அந்த இடமோ, முறையாக பிறந்த சாலமோனுக்கு கிடைக்கிறது. அதன் வழியில் மேசியா பிறக்கிறார் !!
ஆகவே,தாவீதின் பாவம் குழந்தைக்கு நரகத்தை தருவதில்லை. மாறாக, இவ்வுலக வாழ்விற்கான தண்டனையோ, தாவீதின் விளைவினால் பிள்ளைக்கு ஏற்பட்டது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக