வெள்ளி, 9 அக்டோபர், 2020

#1017 – பூமி அழியுமா? 2பேதுரு 3:10ல் அழியும் என்று சொல்லப்பட்டாலும், பிரசங்கி 1:4 மற்றும் சங் 78:69ம் வசனத்தில் பூமி நிலைத்திருக்கும் என்றிருக்கிறதே?

#1017 – *பூமி அழியுமா? 2பேதுரு 3:10ல் அழியும் என்று சொல்லப்பட்டாலும், பிரசங்கி 1:4 மற்றும் சங். 78:69ம் வசனத்தில் பூமி நிலைத்திருக்கும் என்றிருக்கிறதே*?

*பதில்* :
இந்த கேள்விக்கான வசனங்களை கீழே பதிவிட்டபின் அதனைக் குறித்து விவரிக்கிறேன்.

பிரசங்கி 1:4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

சங்கீதம் 104:5 பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.

ஏசா. 65:17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

2பேதுரு 3:10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.

2பேதுரு 3:12- தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.

2பேதுரு 3:13- அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

வெளி. 21:5 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாத்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

*விளக்கம்*:
'ஆவ்லம்' என்ற எபிரேய வார்த்தைக்கு நீண்ட, காலவரையற்ற காலத்தைக் குறிக்கிறது.

எப்போது இது ஒரு முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாத ஒரு காலகட்டம்.

பிரசங்கி 1:10ம் வசனத்தில் "இதைப் பார், இது நூதனம் (புதியது) என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே”.

'ஆவ்லம்’ என்ற அதே வார்த்தையை "பூர்வகாலங்களிலும்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆகவே, இதை எழுதியவர், உலகம் எல்லையற்ற காலமாக இருந்து வருவதாகக் கூறவில்லை, ஆனால் அது இவ்வளவு காலமாக இருந்து வருகிறது, அது தொடங்கியகாலத்தை துல்லியமாகச் சொல்வது கடினம் என்று குறிப்பிடுகிறார்.

ஏசாயா 42:14-ல் “நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்” என்று குறிப்பிடுகிறார்.

'ஓவ்லாம்' என்ற அதே சொல் "வெகுகாலம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த வசனத்தில் கடவுள் ஒருபோதும் பேசமாட்டார் என்று சொல்லவில்லை. உண்மையில், இப்போது அவர் கூக்குரலிடுவார் என்று அவர் கூறுகிறார்.

அவர் நீண்ட, காலவரையின்றி தனது அமைதியைக் கொண்டிருந்தார், ஆனால் அந்த நேரம் முடிவுக்கு வந்தது. எனவே, "என்றென்றும்" ஏதோ ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்பதைக் காண்கிறோம்.

பழைய ஏற்பாட்டின் பலிகளிலும் இது காணப்படுகிறது. "அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்தியகட்டளையாக கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்."லேவி. 24:9.

'ஓவ்லாம்' என்ற சொல் "நித்திய" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நித்தியகட்டளை என்றிருந்தாலும், அந்த பலிகள் முடிவுக்கு வந்தன (எபிரெயர் 9: 25-28).

அதேபோல், எருசலேம் தேவாலயம் என்றென்றும் நிற்கும்படி கட்டப்பட்டது (2 நாளாகமம் 2:4), ஆனால் அந்த கட்டிடம் நிலைக்கவில்லையே !!

2பேதுரு 3ம் அதிகாரத்தில், உலக அழிவைப் பற்றி தெரிவிக்கிறார் பேதுரு. (வ3-6)

உலகம் அழிக்கப்படக்கூடும் என்று மக்கள் நம்ப மறுக்கிறார்கள் என்பதை பேதுரு சுட்டிக்காட்டுகிறார். (2பேதுரு 3:3-6)

ஆகவே, உலகம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடவுள் ஒரு முறை ஜலப்பிரளயத்தின் மூலம் உலகை அழித்ததை (2பேதுரு 2:5; ஆதி. 7:10-23, 9:15; யோபு 12:15; மத். 24:38-39; லூக்கா 17:27) போல முழுமையாக அழிவு உண்டு என்பதை பேதுரு சுட்டிக்காட்டுகிறார்.

பிரசங்கி 1:4ம் வசனத்தின் சூழல் முந்தைய வசனத்தில் (3) வெளிப்படுத்தப்பட்டுள்ளது, "சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?" வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரசங்கியின் முன்னோக்கானது, முற்றிலும் மனித கண்ணோட்டத்தில் உள்ளது.

சங்கீதத்திலும் இதுவே நிகழ்கிறது. இது ஒரு மனித கண்ணோட்டத்தின் ஒர் விளக்கம்.

ஆனால், ஏசாயா 65:17 மற்றும் 2பேதுரு 3:10 ஆகியவற்றில் சூழல்கள் முற்றிலும் வேறுபட்டவை.

எதிர்காலத்தில் புதிய வானங்களும் புதிய பூமியும் உருவாக்கப்படும் காலத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

மேலும், 2பேதுரு 3:7ல் “ஜீ” என்ற கிரேக்க சொல் "பூமி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பூமியும் வானமும் நெருப்பால் அழிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மூன்று வானங்கள் உள்ளன என்பதை பவுல் கொரிந்தியருக்கு எழுதியதில் அறிகிறோம். (2கொரி. 12:2).

முதல் வானம், பறவைகள் பறக்கும் இடமாகும், அதை இப்போது வளிமண்டலம் என்று அழைக்கிறோம் (எரேமியா 4:23-25).

இரண்டாவது வானம் நட்சத்திரங்கள் இருக்கும் இடமாகும், அதை நாம் விண்வெளி என்று அழைக்கிறோம் (ஏசாயா 13:10).

மூன்றாவது வானம் தேவனுடைய சிம்மாசனம் இருக்கும் இடத்தில் உள்ளது (எபிரெயர் 9:24).

இந்த வானங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை நெருப்பால் அழிக்கப்படும் என்று பேதுரு குறிப்பிடுகிறார்.

கடவுளின் வசிப்பிடம் நிரந்தரமானது என்பதை நாம் அறிந்திருப்பதால், பூமியும் அதனுடன் சேர்ந்து வளிமண்டலமும் விண்வெளியும் அழிக்கப்படும் என்ற தேவையான முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது.

தேவனால் இதைச் செய்ய முடிகிறது என்பததை அவர் நீண்ட காலத்திற்கு முன்பே உலகம் முழுவதையும் வெள்ளத்தில் ஆழ்த்த முடிந்ததிலிருந்து நாம் ஊர்ஜீதப்படுத்திக்கொள்ளமுடிகிறது.

“கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப் போகும்; ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது”  எபிரேயர் 1:10-13

“நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.”  சங்கீதம் 102: 25-26  

“உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போகும்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.” ஏசாயா 51:6

"வானமும் பூமியும் கடந்து போகும், ஆனால் என் வார்த்தைகள் எந்த வகையிலும் ஒழியாது" (மாற்கு 13:31) என்று இயேசுவே வலியுறுத்தினார். இது ஒரு வேளை நடைபெறுமோ என்பதல்ல, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக