#1018 – *நிலவு எப்படி சேதப்படுத்தும்?* சங்கீதம் 121:6ம் வசனத்தில் பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை என்று உள்ளதே? நிலவு எப்படி சேதப்படுத்தும்?
*பதில்:* நிலவின் வெளிச்சம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார்.
ஓரியண்டல் நாடுகள் என்று சொல்லப்படும் ஜப்பான், சீனா, கொரியா, ஹாங்காங், தைவான், இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா, திபெத், நேபாளம் மற்றும் ரஷ்யாவின் பெரும்பாலான இடங்களை உள்ளடக்கிய ஆசிய கண்டங்களை பொருத்தமட்டில் பகலின் கடுமையான வெப்பத்தைத் தொடர்ந்து வரும் திடீர் குளிரை அவர் குறிப்பிடுகிறார் என்று சிலர் கருதுகின்றனர்.
மேலும், சூரியன் பகலை ஆளுவது போலவே சந்திரனும் இரவை ஆளுகிறான் என்ற கவிதை ரீதியாகவோ அல்லது உண்மையில் சந்திரனின் தன்மையக் குறிப்பிடுகிறது என்றும் கூறப்படுகிறது.
பல்வேறு வகையான நோய்களை உருவாக்குவதில் சந்திரனின் செல்வாக்கிற்கு ஏதேனும் ஒரு குறிப்பு இருப்பதாக விஞ்ஞானிகளின் கருத்து இருக்கிறது.
குறிப்பாக பைத்தியம் / சந்திரரோகிகள் (மத் 4:24, 17:15)
சந்திரன் சூரியனைப் போன்ற தெளிவான மற்றும் முழு ஒளியைக் கொடுக்காததால், அதன் வழிகாட்டுதலை நம்பும் பயணிகள் ஆறுகள் அல்லது புதைகுழிகளில் வழிநடத்தப்படலாம்.
மேக்ரோபியஸ் என்ற எழுத்தாளர், சில நாடுகளில் வெளிபரப்பில் உறங்கும் குழந்தையின் முகத்தை, சந்திரனின் சில கற்பனை விளைவுகளிலிருந்து காப்பாற்றுவதற்காக, துணியால் மூடிவைப்பது பழக்கம் என்கிறார்.
மேலும் அவர் சொல்கிறது, நிலவுவெளிச்சத்தில் தூங்குவது, கழுத்தை கடினமாக்குவதும், அதனால் இயல்பாக அல்லது இலகுவாக மறுபக்கம் திரும்புவது போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாக அறிகின்றனர்.
மேலும், இரவில் வெளிப்பரப்பில் உறங்கும் போது, நிலவின் நிமித்தம் ஏற்படும் பொதுவான சில நோய்களை தவிர்ப்பதற்காக முகத்தை மூடிக்கொள்ளவேண்டும் என்று சில நம்பிக்கைகளும் கிராமங்களில் உண்டு.
குறிப்பாக, பைத்தியம் அல்லது அதை சார்ந்த நோயை உருவாக்குவதில் சந்திரனின் தாக்கம் உள்ளது.
இவற்றில் சில விஷயங்கள் முற்றிலும் கற்பனையானவை.
உண்மையானது என்னவென்றால், பகல் வெப்பத்திலிருந்து இரவு குளிர் வரை ஏற்பட்ட திடீர் மாற்றங்களிலிருந்து பயப்படக்கூடிய விளைவுகள் இருந்தன.
மேலும், இந்த விளைவுகள் சந்திரனைக் காரணம் காட்டுகிறது. (ஆதி 31:40)
எப்படியாயினும், பகல் மற்றும் இரவின் ஆபத்துகளில் தேவன் ஒரே மாதிரியாக நமக்கு பாதுகாவலராக இருப்பார்..
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக