ஞாயிறு, 26 ஜூலை, 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 26 July 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee

நம்மை முழுவதுமாய் நேசிக்கும் பிதா தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

வேதாகமத்தின் எண்களை ஆராய்ந்து வருகிறோம்.
இன்று எண் 12
                                                    
12 – தேவன் (3) x மனிதனுக்காக உலகத்தில் (4) இறங்கி வந்ததையும், தேவனுடைய சபையையும், தேவனுடைய வல்லமையையும், அவருடைய திட்டமான ராஜரீகத்தையும் குறிக்கிறது.

தேவனுடைய வேலையில் பொல்லாதவர்களை அழிப்பதும் உண்மையுள்ளவர்களின் மீட்பும் அடங்கும். தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக, மனிதனை மீண்டும் கடவுளிடம் கொண்டுவருவதற்கான முயற்சியாக நாகரிகத்துடன் இணைந்து பணியாற்ற கடவுள் நோவாவுக்கு 120 வருட கால அவகாசம் கொடுத்தார். ஆதி 6:3

120 வருடங்கள் உலகத்திற்கு நோவா மூலம்  எச்சரிக்கை.. [தேவத்துவம்(3) உலகத்திற்காக(4) முழுமையாய்(10) கொடுத்தது - 3x4x10=120]

12 கோத்திரங்கள் – பழைய ஏற்பாட்டில். ஆதி 49:28
12 அப்போஸ்தலர்கள் – புதிய ஏற்பாட்டில். மத் 10:1-4

பிரதான ஆசாரியன் கவசத்தில் 12 கற்கள் (யாத் 28:15-21)

வருடத்திற்கு 12 மாதங்கள் (எபிரேயத்தில் துவங்கியது)

பகலுக்கு 12 மணித்துளிகள். யோ 11:9

12புளிப்பில்லா அப்பங்களை பிரதான ஆசாரியன் ஓய்வு நாள் தோறும் ஆசரிப்பு கூடாரத்தில் வைக்கவேண்டும் (லேவி 24:5-6)

12 ஆச்சரியாமான காரியங்கள் ஆசரிப்பு கூடாரத்தில் !!  *வாசித்து எண்ணி* பாருங்கள் (read & count) – எண் 7:84-88

12 நபர்களை நிற்க இஸ்ரவேலர்கள் யோர்தானை கடக்க சொன்னார் தேவன் (யோசு 3:17)

12வயதான போது இயேசுவை எருசலேமில் பார்க்கிறோம்! (லூக் 2:41-47)

வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் மாத்திரம் :
12 கதவுகள், அஸ்திபாரங்கள், பெயர்கள், பன்னீராயிரம் நீளம்xஅகலம்xஉயரமுள்ள  நகரம், ஆபரணங்கள், முத்துக்கள், பழங்கள் !! எல்லாம் 12ல்

*கவனிக்க* :  எண்களை ஆராய்ந்தது பைபிள் ஜோதிடத்திற்கு அல்ல !! 
தேவனின் செய்கைகளில் உள்ள எண்களின் ஒற்றுமையும் அர்த்தங்களையும் நாம் ஆச்சரியத்தோடு உணர்ந்து கொள்கிறோம் !!

அர்த்தமில்லாமல் எந்த எண்ணும் வேதத்தில் பார்க்க முடியவில்லை !!

இன்று கர்த்தருடைய நாள் !!! தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய் பாதுகாத்து பெலப்படுத்தவாராக.

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக