#989 - *யோவான் ஸ்நானன் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார். ஆனால் இயேசுவின் சீஷர்கள் என்ன நோக்கத்தில் ஞானஸ்நானம் கொடுத்தனர். யோ. 4:3*
*பதில்*
மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினார் யோவான் ஸ்நானன். மத். 3:2
அதை ஏற்றுக்கொண்டவர்கள் யோவானின் செய்தியைக்கேட்டு தங்களை இராஜ்ஜியத்திற்கென்று தயார்படுத்திக்கொள்ளும்படியாக பாவத்தை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டனர். மத். 3:5-6, மாற்கு 1:4, லூக்கா 3:6, லூக்கா 7:29
யோவானின் போதனையை ஏற்காதவர்கள் அவனுக்கு சீஷராகி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள மறுத்தனர். லுக்கா 7:30, யோ. 4:1
அதாவது கிறிஸ்துவின் இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் மல்கியா தீர்க்கனுக்கும் கிறிஸ்துவின் பிறப்பிற்கும் இடைப்பட்ட 400 வருட மௌன காலத்தில் இருந்த ஜனங்கள் தேவனுடைய திட்டமான கிறிஸ்துவின் இராஜ்ஜியத்திற்கு எதிராக நின்றனர்.
அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த யோவான் ஸ்நானன் காவல் வைக்கப்பட்டதை இயேசு கிறிஸ்து அறிந்து கலிலேயாவிற்கு போய் யோவான் பிரசங்கித்ததை தானும் தொடர்கிறார். மத். 4:12, 17
மத். 4:12 யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய் …
மத். 4:17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
தேவனுடைய நோக்கத்தை யோவான் ஸ்நானனும் கிறிஸ்துவும் நிறைவேற்றுகின்றனர். யோ. 4:1
இயேசு கிறிஸ்து தன்னைக்காட்டிலும் அதிகம் ஜனங்களை சீஷராக்குகிறார் என்பதை அறிந்த யோவான் ஸ்நானன் தன்னுடைய கடமை நிறைவேறுகிறதை தன் சீஷர்கள் மத்தியில் அறிக்கையிட்டு சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். யோ. 3:26, 29
பாவமன்னிப்பிற்கென்ற ஞானஸ்நானம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னரே கட்டளையிடப்பட்டதென்று நாம் அறிகிறோம். மத். 28:18-19
கிறிஸ்துவின் சீஷரும் யோவான் ஸ்நானனைப் போல பரலோக இராஜ்ஜியத்திற்கென்று ஜனங்களை மனந்திரும்ப போதித்து (மத். 10:7) யோவான் ஸ்நானனைப்போலவே மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்திருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
*கேள்விக்கு சம்பந்தமில்லாத பின் குறிப்பு* -> தன்னைக்காட்டிலும் வேறொரு ஊழியர் வளர்கிறார் என்றதும் (யோ. 3:26) அவர் வளர்ச்சியை குறைக்கும்படியாக பல முயற்சிகளையும், தவறான தகவல்களையும், மொட்டை கடுதாசிகளையும், உதவி தொகையை வராமல் தடுக்கும்படியாக சகல வித்தைகளையும் பிரயோகித்து தவறான ரிப்போர்ட் எழுதிப்போடும் போலி ஊழியர்களுக்கும் விசுவாசகளாய் இல்லாமல் விஷ ஊசிகளாய் இருப்பவர்களுக்கும் யோவான் ஸ்நானனின் “யோ. 3:30” ல் வரும் வாக்கியம் ஒரு பெரிய சவுக்கடி...
கிறிஸ்துவின் போதனையை மேடை போட்டு கவர்ச்சிகரமாக பேசுவது சுலபம்.
*வாழ்ந்து காட்டுவதே சவால்*.
கிறிஸ்துவின் கடைசி நிமிடம் வரை பரிசேயர் கூட்டம் மொய்த்துக்கொண்டு தான் இருக்கும் !!
இந்த நுணுக்கமான கேள்விக்காய் நன்றி.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக