ஆதியும் அந்தமுமான தேவாதி தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
உங்க கடவுள் இயேசு என்றால், இயேசு பிறந்து
சுமார் 2020
ஆண்டுகள் தானே ஆகிறது. நாங்க கும்பிடற சாமி கி.மு விலேயே இருந்தாரு..
நீங்க எப்படி இயேசுவை கடவுள்னு சொல்றீங்கன்னு ஒருவர் வாதிட்டார். பல கிறிஸ்தவர்களிடம்
இந்த கேள்விக்கு திணறல் உண்டு !!
இயேசு கிறிஸ்துவைக்குறித்து வேதம் என்ன
சொல்கிறதென்று பார்ப்போம்:
கொலோ 1:18 ... அவரே *ஆதியும்* மரித்தோரிலிருந்து
எழுந்த முதற்பேறுமானவர்.
வெளி 3:14 ... உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும்,
தேவனுடைய சிருஷ்டிக்கு *ஆதியுமாயிருக்கிற* ஆமென் என்பவர் ..
யோ 1:1-3
*ஆதியிலே வார்த்தை இருந்தது*, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது,
அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும்
அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
Col 1:15-17 அவர் அதரிசனமான தேவனுடைய
தற்சுரூபமும், *சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்*.
ஏனென்றால் அவருக்குள் சகலமும்
சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய
காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும்,
கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும்,
அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும்
சிருஷ்டிக்கப்பட்டது. *அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்*,
எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
** இயேசு என்ற பெயர் *மாம்சத்தில் இந்த
உலகத்தில் பிறந்த போது கொடுக்கப்பட்ட பெயர். மத் 1:21,
1யோ 4:2-3, யோ 1:14, 2யோ
1:7, 1தீமோ 3:16
யோசேப்பினுடைய (மனுஷனுடைய) வித்தின் மூலமாக
பிறக்காமல் தேவ ஆவியானவரின் பெலத்தால் மாத்திரமே பிறந்ததால் அவர் தேவ குமாரன்
என்னப்படுகிறார். மத் 1:20, லூக்கா 1:35
இயேசு ஆதியில் இருந்தே நம் எல்லாருக்கும்
தேவன். ரோ 9:5, ஏசா 9:6-7, 1யோ
5:20, எபி 1:8-13, 1தீமோ 3:16, அப் 20:28
ரோமர் 9:5 ..
மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும்
ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
இயேசு இந்த உலகத்தில் பிறந்த நாள்
முதல் அல்ல – உலகம் உருவாவதற்கு முன்னமே அவர் கடவுள். நம்மை பரலோகம் கொண்டு செல்ல
முடியும் இந்த பூமியில் பிறந்தார். அப் 4:12
சின்ன கதவை கொண்டுள்ள பரலோகத்தின் வாசலை
சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றால் - அனைவரது கண்களும் காணதக்கதாக பரமேறிப் போன
இயேசுவை பின்தொடராமல் விட்டால் வழி மாறிவிடுவோம். யோ 14:6, மத் 7:14
*Eddy
Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp
Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
வேத வகுப்பு மற்றும்
தேவ செய்திகள் கேட்க:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக