#988 - *வேதாகமத்தை படித்து சரியாக புரிந்து கொள்வது எப்படி?*
*பதில்*
இந்த கேள்விக்கு ஒரு தீர்வான பதிலை ஒருவரும் முழுமையாக தந்து விடமுடியாது.
என் முறைப்படி எவ்வாறு படித்தால் இன்னும் ஆழமாக செல்லமுடியும் என்று விவரிக்க முயல்கிறேன்.
வேதாகமத்தை தியானிப்பது எப்படி (#622 & #378) என்ற கேள்விக்கு இரண்டு முறை ஏற்கனவே பதிலளித்திருக்கிறேன். ஆனால் அவைகளின் நோக்கமும் பதிலும் வேறு.
*யாரெல்லாம் வேதாகமத்தை படிக்க வேண்டும்*?
பூமியின் இராஜாக்களும்,
ஜனங்களும்,
குடும்பமும்,
தனிநபரும் தேவனுடைய வார்த்தையை படிக்க வேண்டும் என்று வேதாகமம் வலியுறுத்துகிறது.
வசனங்கள் : உபா. 17:19, யாத். 24:7, உபா. 31:9-13; யோசுவா 8:34-35; நெகே. 8:1-3, 8, 18; லூக்கா 4:16-21; அப். 15:21; கொலோ. 4:16, உபா 6:4-9; 2தீமோ. 3:15, சங். 1:2; 119:11, 105; அப். 8:28-32.
1-
நாம் தொடர்ந்து வேதாகமத்தை முறையாக கிரமமாக படிக்க வேண்டும்.
2-
வேதத்தை பகுப்பாய்வு முறையில் படிக்க வேண்டும். வார்த்தையின் கூறுகளை முழுவதுமாக நன்கு புரிந்துகொள்ள நாம் அதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் என்ற வேதத்தின் இரண்டு முக்கிய பகுதிகளை புரிந்து கொள்ள வேண்டும்.
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் "சத்திய வார்த்தையை சரியாகக் கையாளுவதற்கு" முக்கியமானவை (2 தீமோத்தேயு 2:15).
நம்பகமானதும் உபதேச பிழையில்லாத ஆசிரியர்களின் வேத அகராதிகளை ஒப்பிடுவதில் நல்ல புரிதல் உண்டாகும்.
*வேத அகராதிகள் தேர்ந்தெடுப்பதில் மிக அதிக கவனம் தேவை*. அடிப்படையாக (Halley’s Bible Handbook) ஹாலியின் பைபிள் கையேடு இதற்கு ஒரு பயனுள்ள கருவியாகும். அவசியப்படுகிறவர்களுக்கு நான் அனுப்பிதரலாம். ஆனால் அது ஆங்கிலத்தில் உள்ளது !! நான் படித்த முறை ஆங்கிலம் என்பதால் என்னிடத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் ஆங்கிலமே. சுமார் 120க்கும் மேற்பட்ட பொக்கிஷமான புத்தகங்களை ஒப்பீடு செய்வதற்காக வைத்திருக்கிறேன்.
3-
எந்த வசன பகுதியைப் படித்தாலும் :
யார் எழுதியது,
எப்போது எழுதியது,
யாருக்கு எழுதியது என்ற கேள்வியை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் ரீதியில் அந்த பகுதியை நேர்த்தியாகப் புரிந்து கொள்ள ஏதுவாகும்.
4-
வேதாகமத்தில் மூன்று காலங்கள் உண்டு.
அ-முற்பிதாக்களின் காலம் (ஆதாம் – மோசே)
ஆ-நியாயபிரமாண காலம் (மோசே-இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வரை)
இ-கிறிஸ்துவின் காலம் (இயேசு கிறிஸ்துவின் சிலுவைக்கு பின் – உலகத்தின் கடைசி வரை)
இந்தக் கால நிலைமையைப் புரிந்து சொல்லப்பட்ட வசனத்தை அர்த்தங்கொள்ளல் அவசியம்.
5-
வேதாகமத்தில் சொல்லப்பட்டவைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் படிக்கவேண்டும்.
5-
கையில் ஒரு பென்சில் மற்றும் ஒரு கையேடு வைத்துக்கொள்ளவும். புரியாத வசனங்கள் வரும் பட்சத்தில் அதை குறித்துக்கொண்டு முன்னேறி செல்லவும். பின்வரும் பகுதிகள் உங்களுக்கு அந்த சந்தேகங்களை தீர்த்துவிடும் !!
6-
வேத புத்தகங்களின் பெயர்களை நினைவில் கொள்ளுங்கள். இதை முதலில் மனனம் அல்லது தெளிவாக்கிக் கொள்வது அவசியம்.
வேதத்தில் உள்ள 66 புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஏதோவொன்றைப் பற்றியது. புத்தகத்தின் எந்தவொரு கருத்தாக்கத்திற்கும் தொடக்கப் புள்ளி, முதலில், அந்த புத்தகங்கள் என்ன, அவை ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை, மற்றும் ஒரு பொதுவான வழியில், ஒவ்வொன்றும் எதைப் பற்றியது என்பதை அறிந்து கொள்வது.
7-
பிடித்த வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள்.
மேலும்
வேதாகமத்தின் பக்கங்களில் காணப்படும் கருத்துக்களைப் புரிந்துகொள்ள வெவ்வேறு மாணவர்களுக்கு வெவ்வேறு அணுகுமுறைகள் தேவைப்படும்.
வெவ்வேறு ஆசிரியர்கள் தங்களுக்கான முறைகளைப் பயன்படுத்துவார்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக