சகலத்தையும் நன்மையாய் நடத்துகிற தேவனே
நம்மை ஆசீர்வதிப்பாராக.
இது தேவை, அது தேவை, ஆசீர்வதியும், சமாதானத்தை
தாரும், சுகம் தாரும், அற்புதம் செய்யும், தேவைகளை சந்தியும், பெலன் தாரும், என்று
தேவனிடம் கேட்டு கேட்டே நாம் பழகி விட்டோம்.
இந்த தேவைகளை முன் வைப்பதற்காகவே – ஒரு
கடமைக்கென்று ஜெபத்தின் ஆரம்பத்தில் கொஞ்சம் அவரைப் புகழ்ந்து சொல்லிவிட்டு, நேரடியாக விண்ணப்பத்திற்கு
சென்று விடுகிறோம்.
நம் தேவை ஒரு நாளும் நிறைவு பெறாது.
வியாதி இருந்தாலும், கஷ்டம் இருந்தாலும்,
கடன் இருந்தாலும், பிரச்சனை இருந்தாலும், ஜீவனையும் சுவாசத்தையும் கொடுத்து நம்மை ஜீவனோடு
இன்றைக்கும் வைத்து இருக்கிறாரே, இது எவ்வளவு பெரிய காரியம். (அப் 17:25-26)
உலகமே கொள்ளை நோயால்
பாதிக்கப்பட்டாலும், ஊரெல்லாம் கலவரமாக
இருந்தாலும் கொத்து கொத்தாக மடிந்தாலும் வறுமையும் துன்பமும் தலைவிரித்து
ஆடினாலும், உண்பதற்கு அடுத்த வேளை ஆகாரம் இல்லாவிட்டாலும்,
கொடிய வியாதியால் பிடிக்கப்பட்டாலும் - இவை அனைத்தும் இந்த சரீரத்தில் ஜீவன் இருக்கும்
வரை தான்.
Busyயாக ருசியுடன் சாப்பிட்டு
கொண்டிருந்தவனுடைய ஆகாரம் நிறைந்த கையானது வாய் வரைக்கும் போகும் வழியில் ஏதாவது
தவறி விழுந்துவிட்டால் அதையாவது எடுத்து தன் கொடும் பசியை ஆற்றிக்கொள்ள
காத்துக்கொண்டிருந்த லாசரு நிரந்தர சந்தோஷத்தை அடையும்படி தேவன் அநுக்கிரகம்
செய்தாரே !! லூக்கா 16:21, 23
தான் ஐசுவரியவான் என்று ஊர் அறிய வாழ்பவன்
- சொந்த சாப்பாட்டு மேஜை அருகிலேயே கொடிய வியாதியுடனும் கொடும் பசியுடனும் ஏங்கி
கொண்டிருந்த லாசருவை மறந்தால் சொந்த
சரீரம் சுடும் போது அது வரை உதாசீனப்படுத்திய லாசருவின் விரல்கள் கூட ஞாபகம் வரும்
!! லூக்கா 16:19, 24
இருக்கும் கொஞ்ச பெலத்திலாகிலும் தேவனை
பற்றிக் கொள்ளவும் அண்டியிருக்கும் துன்பத்தில் உள்ளவர்களை உதாசீனப்படுத்தாமலும்
இருப்போம்.
இம்மட்டும் நம்மை அற்புதமாய் நடத்தின
தேவனுக்கு கடமைக்காக அல்ல உணர்வோடு நன்றிகளையும் துதிகளையும் ஏறெடுப்போம்..
Eddy
Joel Silsbee
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp
Groupல் இணைய :
வேத வகுப்பு மற்றும்
தேவ செய்திகள் கேட்க:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக