வெள்ளி, 12 ஜூன், 2020

#985 - ஆரம்பத்திலிருந்தே அனைவரும் தேவனுடைய பிள்ளைகளாயிருக்க, இயேசு இந்த உலகில் உயிரோடு இருக்கும் போதே ஏன் இந்த நிலை அங்கீகரிக்கப்படவில்லை.

#985 - *ஆரம்பத்திலிருந்தே அனைவரும் தேவனுடைய பிள்ளைகளாயிருக்க, இயேசு இந்த உலகில் உயிரோடு இருக்கும் போதே ஏன் இந்த நிலை அங்கீகரிக்கப்படவில்லை*.

*பதில்*
எகிப்திலிருந்து இஸ்ரவேலர் வெளியே வந்தபின் அவர்கள் கடைபிடிக்கும்படியாக :
பிரதானமாக 10 கட்டளையும் உபகட்டளைகளாக 603 கட்டளையுமாக மொத்தம் 613 கட்டளைகளை தேவன் அவர்களுக்கு (இஸ்ரவேலருக்கு) கொடுத்தார். யாத். 20:2, உபா. 9:9

அந்த 603 கட்டளைகளையும் மோசே உட்பட மனிதகுலத்தில் (இஸ்ரவேலரில்) ஒருவர் கூட *100 சதவீதம்* கடைபிடிக்க முடியவில்லை என்பதை நிரூபித்தார்கள் !! ரோ. 8:3, கலா. 3:10, ரோ. 4:15, ரோ. 7:12-13, யாக். 2:10-11

ஆனால் - 100 சதவீதமும் கடைபிடிக்கப் படமுடியாத கட்டளைகளை தேவன் மனிதனுக்கு கொடுத்துவிடவில்லை.

அது சாத்தியமே என்பதை நிரூபிக்கும் வண்ணம் – தன் குமாரனை நியாயபிரமாணத்திற்குட்பட்டவராய் அனுப்பி, ஒருவன் மனுஷன் 100 சதவீதமும் நியாயபிரமாணத்தின் படி வாழ முடியும் என்பதை குற்றமற்றவராக வாழ்ந்து நிறைவேற்றி காட்டினார் இயேசு. கலா. 4:25

1)மனிதக்குலத்தையே தேவனைவிட்டு பிரிக்க வேண்டும் என்று பிசாசு நினைத்த நினைவை,

2)ஆதியிலேயே தான் முறியடிப்பேன் என்ற வாக்குத்தத்தத்தை (ஆதி. 3:15) நிறைவேற்றும் வண்ணமும்,

3)பாவநிவாரண பலி, போஜனபலி, சர்வாங்கதகனபலி, முதற்கனிபலி, சுகந்தவாசனைபலி, சமாதானபலி, குற்றிநிவாரணபலி போன்ற அனைத்து பலியையும் ஒன்று சேர்க்கும்படியாக,

4)சரீரம் முழுவதும் கொடுமையாய் அடிக்கப்பட்டு பிட்கப்பட்டு, முழு இரத்தமும் சிந்தும்படியான அளவில் சிலுவை மரணத்தை மரணதண்டனையாக நிறைவேற்றும் ரோமர் காலத்தில் தன் குமாரனை அனுப்பி,

5)ஆசாரியர் கையினாலேயே அந்த பலியை ஏறெடுக்க வைத்தார் தேவன்.

ஆகவே கிறிஸ்துவின் உயிர் உலக மாம்சத்தை விட்டு பிரியும் போது அந்த பிரமாணமும் தேவனுடைய திட்டமும் நிறைவேறுகிறது.

அதை விளங்கப்படுத்துப்படி வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே பிரதான ஆசாரியன் திரைக்கு உள்ளே செல்லும் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் அவசியம் இனி இல்லை என்பதை தேவாலயத்தின் திரைச்சீலையை கிழித்து அந்த முறைமையை முழுமையாக்கினார் !!

ஆதார வசனங்கள் : கலா. 4:5, எபி. 7:26, மத். 5:17, எபி. 10:8-10, ரோ. 8:3, 1கொரி. 5:7, எபே. 5:2, எபி. 7:27, எபி. 9:14, எபி. 9:26-28, மத். 27:22-23, யாத். 29:10, மத். 27:50-51, ரோ. 10:4, எபே. 2:14-18

எபி. 8:7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே என்ற வசனமும் & எபி 7:18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது என்ற வசனமுமானது “நியாயபிரமாணம் பிழையானது என்பதல்ல”  அவைகளை முழுவதும் பின்பற்றமுடியாத அளவிற்கு மனிதனின் தரம் உயரமுடியவில்லை என்பதையே நிரூபித்தது. எவ்வளவு முயன்றும் ஏதாவதொன்றில் மீறினர்.
நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். எபி. 7:19

அதாவது - மனிதகுலமானது தேவனுடைய எதிர்பார்ப்பிற்கு தன் தரத்தை உயர்த்திக்கொள்ளமுடியவில்லை.

நியாயபிரமாணமானது அனைவரையும் கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியது. கலா. 3:24

மேலும் தேவனுக்கு உகந்தவர்களாக நியாயபிரமாணமில்லாதவர்களும் வாழ்ந்தார்கள். எண். 22:6, யாத். 3:1

தேவன் வாக்களித்தது போல - ஆபிரகாமின் வம்சத்தில் கிறிஸ்து வந்ததுமல்லாமல் நியாயபிரமாணத்தை வாழ்ந்துகாட்டி நிறைவேற்றி பலியாக தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஒரு குறிப்பிட்ட ஜனத்திற்கென்று கொடுக்கப்பட்ட நியாயபிரமாணத்தை முடித்து – புதிய பிரமாணத்தை உலக மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்தினார்.

ஆகவே தான் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனென்றார். மத். 15:24.

தனக்கு கொடுக்கப்பட்டதை சிலுவையில் நிறைவேற்றி மூன்றாம் நாள் உயிர்தெழுந்த பின்போ - தன் சீஷர்களை உலகமெங்கும் போகும்படி கட்டளையிட்டார். மத். 28:18-20

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக