*பதில்*
சபை என்றால் - தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களின்
ஐக்கியம் (அப். 2:47)
தொழுகையில் ஐந்து பாகங்களும் இடம் பெருகிறது என்று நாம்
அறிவோம். (கர்த்தருக்கு பிரியமான தொழுகை எது என்று #258ல் இதற்கான விரிவான பதிலை காணமுடியும்)
சபை கூடும் போது செய்யப்படும் தொழுகையின் ஒழுங்குமுறைகளில்
தேவனுடைய வார்த்தையை வாசிப்பது, ஜெபிப்பது போன்ற சிலவற்றை தனிப்பட்ட முறையில் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் தொழுகையின் மற்ற சில அம்சங்களை குழுவாக மட்டுமே
செய்ய முடியும். ஏனெனில் அந்த செய்கைகளின் முக்கியத்துவமே அது *ஒரு குழுவான
நடவடிக்கை* என்பதே.
கர்த்தருடைய பந்தி என்பது கூட்டுறவின் உறுதிமொழி.
நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம்
கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம்
கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த
ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான
நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். 1 கொரி. 10:16-17.
கர்த்தருடைய பந்தியை ஆன்லைனில் (இன்டெர்நெட்) யாருடனும் பகிர்ந்து
கொள்ள முடியாது. ஆகவே, கொரிந்தியர் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கெடுக்க ஒரே இடத்தில் ஒன்று
சேர வேண்டும் என்று பவுல் கூறினார். 1கொரி. 11:20.
மேலும் தொழுகையானது எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை பார்க்கும்போது, "முழு சபையும் ஒரே
இடத்தில் ஒன்று சேர்கிறது" என்று பவுல் கூறினார். (ஆங்கிலத்தில்
If therefore the whole Church be come together into one place) 1கொரி14:23.
இந்த கட்டளைக்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் பாடும்
பாடல்களைக் கவனியுங்கள். "சங்கீதங்களிலும், துதிப்பாடல்களிலும், ஆன்மீகப் பாடல்களிலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடி துதிக்க வேண்டும்". எபே. 5:19.
பாடும் போது நம் தொழுகையானது தேவனை நோக்கி இருக்கும் அதே
நேரத்தில் அது ஒருவருக்கொருவரை நோக்கியும் உள்ளது.
தொழுகையானது தேவனுக்குரியது, ஆனால் நம் தொழுகையானது
அவருக்கு ஏறெடுக்கபடவிடில் அவர் பலவீனமடைந்து விடுவார் என்பது போல நாம் நினைத்துவிடகூடாது.
தேவனானவர் நமக்கு அவசியம். அவராலேயன்றி நாம்
வாழமுடியாது. ஆகவே தேவன் தம்மை தொழுது கொள்ளும்படி கட்டளையிடுகிறார்.
*வசனத்தை கவனிக்கவும்:*
எபி. 10:23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை
அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்
பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. மேலும், அன்புக்கும்
நற்கிரியைகளுக்கும் *நாம் ஏவப்படும்படி* ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்,
ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது
சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். "(எபிரெயர்
10: 23-25).
விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அன்பையும் பகிர்ந்து
கொள்ளும் பந்தத்தின் ஊடே தொழில்நுட்பமானது ஒலியையும் ஒளியையும் மாத்திரமே
தரமுடியும்.
தற்கால கொள்ளை நோயான கொரோனாவானது சொந்த குடும்பத்தினரை விட்டு
மற்ற அனைவரையும் ஒன்று சேர்வதை தடுத்துள்ளது.
குடும்ப தலைவனும் மனைவியும் பிள்ளையுமாக சேர்ந்து வீட்டில்
ஒன்று கூடி தேவனை துதிப்பது சபை கூடுதல்.
செய்தியை குடும்பதலைவன் எடுத்து பேச முடியாத
சூழ்நிலையில் சபை ஊழியர் தன் முயற்சியில் அந்த நேரத்தில் இணையதளம் மூலமாக தேவ
செய்தியை உங்கள் காதுகளில் கேட்கச்செய்கிறார்.
*குடும்பமாக நீங்கள் சேர்ந்து கூடிவரும் போது* :
கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூறுகிறீர்கள்,
ஒன்று சேர்ந்து பாடுகிறீர்கள்,
ஒன்று சேர்ந்து ஜெபிக்கிறீர்கள்,
ஒன்று சேர்ந்து தேவ செய்தியை கேட்கிறீர்கள்,
நீங்கள் சேர்த்து வைத்த காணிக்கையை தேவனுடைய
வார்த்தையின் வளர்ச்சிக்கென்று செலவு செய்ய வேண்டும்.
காணிக்கை கொடுப்பதும் தேவனை துதிக்கும் ஒரு தொழுகையின் செயல்.
2கொரி. 9:
6-7, ரோமர் 15:26; பிலி. 1: 5;
4: 15-18
பலி
செலுத்துவதை ஆபிரகாம் தொழுகை என்றார். ஆதி. 22: 5
மோசேயும்
ஆரோனும் மூப்பரும் பலிசெலுத்துவதை தொழுகை அல்லது பணிந்து கொள்ளுதல் என்று
கூறப்படுகிறது - யாத். 24
தேசத்தின்
முதல் பலன்களை எடுத்து, அவற்றை தேவன் *முன்
கொண்டு வந்து, இஸ்ரவேல் ஜனம் பணிந்து கொண்டது* - உபா. 26: 8-10
தகனபலி
செலுத்தித் தீருமட்டும் சபையார் தேவனைப் *பணிந்து* கொண்டார்கள். 2நாளா. 29: 28-29
சாமுவேலின்
தந்தை ஆண்டுதோறும் *பலியிட்டு தேவனைத் தொழுது* கொண்டார். 1சாமு. 1: 3
கொடுக்கப்படும்
காணிக்கை தேவனுக்கு சுகந்த வாசனையான உகந்த பலி. பிலி. 4:15-18
ஆபேல் காணிக்கையை
கொண்டுவந்த போது மேன்மையான பலி என்கிறது வேதம் – ஆதி. 4:3-5,
எபி. 11:4
நன்மை
செய்யப்படுவதற்காக கொடுக்கப்படும் காணிக்கையில் தேவன் பிரியமாக இருக்கிறார் – எபி.
13:15-16
ஆக
1-பாடல்
பாடுவது
2-தேவ செய்தி
கேட்பது
3-ஜெபிப்பது
4-கர்த்தருடைய
பந்தியில் பங்கெடுப்பது
5-காணிக்கை
செலுத்துவது
ஆகவே தான்
இந்த ஐந்து பகுதியும் ஒரு தொழுகையில் புதிய ஏற்பாட்டு கூடுகையில் இடம் பெற்றதை நாம்
வேதத்தில் காண்கிறோம்.
ஆன்லைனில் இந்த
ஐந்தும் நடைபெற வாய்பில்லை. செய்தியை மாத்திரம் கேட்க அது உதவும். மற்ற அணைத்தும் வீட்டில்
ஒன்று கூடி செய்யப்படவேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக