செவ்வாய், 26 மே, 2020

#968 - தன் தீர்க்கதரிசியாகிய எலிசாவிற்கு தெரிவிக்காமல் தேவன் ஏன் மறைத்தார்?

#968 - *தன் தீர்க்கதரிசியாகிய எலிசாவிற்கு தெரிவிக்காமல் தேவன் ஏன் மறைத்தார்?*

2 இரா 4:27 பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான். Why Lord hide the things to Elisha? Because he is the prophet right.

*பதில்*
தேவனுடைய மனுஷனுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் தேவனுக்கு இல்லை.

பலர் தங்களை மேன்மைபடுத்திக் கொள்ள ஆமோஸ் 3:7ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் அழிவு வருவதை (தண்டனை) தேவன் எப்போதும் முன்னரே எச்சரிப்பு கொடுத்துவிடுவார் என்பது அதன் பொருள். ஆமோஸ் 3:6ஐ கவனிக்கவும். இந்த தலைப்பை குறித்து #342ஐ பார்க்கவும்.

சூனேமியாள் மகன் வியாதிப்பட்டிருந்த விஷயத்தில் தேவன் எலிசாவிற்கு வெளிப்படுத்தாத காரணத்தால் அவள் நீண்ட மற்றும் சிக்கலான பயணத்தை மேற்கொள்ளத் தூண்டியது.

வெளிப்படுத்துவதும் மறைப்பதும் தேவனுக்கு உரியது. எப்போது வெளிப்படுத்த வேண்டும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்பது அவருடைய சித்தமாக உள்ளது. யாரும் கட்டாயமாக வலியுறுத்தி பெற்றுக்கொள்ள முடியாது. அவருடைய வார்த்தைக்காக காத்திருக்க வேண்டியது அவசியமானது.

தீர்க்கதரிசிகள் தேவனிடத்தில் கேட்டும் பதில் கிடைக்காமல் காத்து இருந்த சம்பவம் வேதாகமத்தில் உண்டு. 1 சாமு. 28:6, எசே. 20:3.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக