செவ்வாய், 26 மே, 2020

#967 - லூக்கா 17:31-37 ஏன் இந்த இரண்டு பேரில் ஒருவர் ஏற்றுக் கொள்ளப்படனும்? மற்றவர் கை விடப்பனும்?

#967 - *லூக்கா 17:31-37 ஏன் இந்த இரண்டு பேரில் ஒருவர் ஏற்றுக் கொள்ளப்படனும் மற்றவர் கை விடப்பனும்?*

ஓரிடத்தில் இந்த இரண்டு பேரும் தேவனால் இரட்சிக்கப்பட்டு தேவகட்டளைகளில் உண்மையானவர்களாயின் ……?

*பதில்*
எருசலேமின் அழிவின் நாட்களையும் (70 கி.பியில் அழிக்கப்பட்டது) கிறிஸ்துவின் வருகையின்  (நியாயதீர்ப்பின் போது) நாட்களையும் மத்தேயு 24ம் அதிகாரம் மற்றும் லூக்கா 17ம் அதிகாரம் கலந்து குறிப்பிடுகிறது. இந்த குறிப்பிட்ட பகுதியின் கருத்து ஒற்றுமை இரண்டிற்கும் பொருந்துவதால் நியாயதீர்ப்பின் நாளில் நடக்கும் சம்பவத்தை கீழே குறிப்பிடுகிறேன்.

ஒரே படுக்கையில் இருக்கும் இருவர்,
திரிகை திரிக்கும் இரண்டு ஸ்திரீகள்,
வயிலில் இருக்கிற இருவர் என்பது

முதலில் அவர்களுக்கு இடையில் இருக்கும் கருத்து ஒற்றுமையைக் குறிக்கிறது. ஐக்கியத்தை வெளிக்காட்டுவதைக் குறிக்கிறது.

இருந்த போதும் எவ்வளவு ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் காண்பித்துக்கொண்டாலும் அந்த *இருவரிலும்  உத்தமமாய் இருக்கும் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படும் எச்சரிப்பை பெறுகிறோம்*.

ஒன்றாக வெளி உலகிற்கு காணப்படுபவர்கள் நிச்சயமாக, *பரலோகத்தில் அந்த இருவரும் காணப்படுவார்கள் என்ற உத்திரவாதம் அல்ல*.

சபையிலும் களைகள் கிறிஸ்துவின் வருகை வரைக் காணப்படும். அதை பிரிக்கவோ களையவோ முடியாது. மத். 13:26-29

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வாழ்ந்தாலும் குடித்தனம் நடத்தினாலும் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரே விதமான கருத்து உள்ளதா என்றால் *10 சதவீதம் தேறுவதே கடினம் தான்*.

இரட்சிப்பு எப்படி வருகிறது என்று 6 படிகளை வரிசைப்படுத்தி தரும்படி இக்காலங்களில் மேடைகளில் ஓங்கி பிரசங்கித்துக்கொண்டிருக்கும் பத்து ஊழியர்களிடம் கேட்டு வாங்கிப் பாருங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மொத்தம் 10 பதில்களை பெறுவீர்கள் !!

இப்படி வெளி உலகிற்கு தங்கள் ஒற்றுமையை காண்பிப்பவர்கள் இருதயத்தில் கர்த்தரின் விசுவாசத்தைப் பற்றிய *உண்மையான சத்தியத்தில் இருக்கும் இருவர் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயம் அங்கே அவர்கள் பிரிக்கப்படுவதில்லை* !!!

பிரிப்பதை குறித்து அவர் குறிப்பிடவில்லை மாறாக தெரிந்தெடுப்பை குறிப்பிடுகிறார். லூக்கா 17:20-37

உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். மத். 24:42

நன்மை மற்றும் தீமை செய்த இரண்டு பேருமே உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று யோவான் சொன்னார் (யோவான் 5: 28-29).

ஆனால் நன்மை செய்தவர்கள் மட்டுமே கர்த்தரிடம் சேகரிக்கப்படுவோம். யோ. 5:29, 1 தெச. 4:16-17.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக