வெள்ளி, 22 மே, 2020

#962 - பிசாசு பிடித்தவர்கள் மத்தேயு 8:28ல் இருவர் என்றிருக்க மாற்கு 5:2, லூக்கா 8:27ல் ஒருவர் என்று வருகிறது.

#962 - *பிசாசு பிடித்தவர்கள் மத்தேயு 8:28ல் இருவர் என்றிருக்க மாற்கு 5:2, லூக்கா 8:27ல் ஒருவர் என்று வருகிறது. யார் அந்த இரண்டு நபர்?*

*பதில்*
முன்னே நடந்த சம்பவங்களை ஒப்பிடும் போது மூன்று எழுத்தாளர்களும் குறிப்பிடுவது ஒரே நிகழ்வு தான் என்பதில் ஊர்ஜீதம் ஆகிறது.

மத்தேயு முழுமையாக இருவரையும் குறிப்பிடுகிறார்.
மற்ற இருவரும் இரண்டில் ஒருவரை முன்னிறுத்துகிறார்கள்.

ஒருவரை குறிப்பிடுவதால் இரண்டாமவர் இல்லை என்பதல்ல.

நபர்களை அல்ல முக்கியத்துவம் என்னவென்றால் :
கிறிஸ்துவை கண்டு பிசாசுகள் பயப்படும் கிறிஸ்துவின் வல்லமையை மூன்று எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள் என்பதே.

மூவரும் பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட விதத்தை ஒன்று போல் விளக்கியிருக்கிறார்கள்.  எண்ணிக்கையில் வேறுபட்டாலும் – கருப்பொருள் கிறிஸ்துவின் வல்லமையை வெளிப்படுத்துவதே.

யார் அந்த இருவர் என்ற குறிப்பு வேதாகமத்தில் சொல்லப்படவில்லை. கிறிஸ்துவின் வல்லமையே முக்கியத்துவம் என்பதால் அவர்களை குறித்த தகவல்கள் முக்கியத்துவம் பெறவில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக