*பதில்*
இயேசு
யூதா கோத்திரத்தில் வந்ததற்கு முதல் மற்றும் முக்கியக் காரணம், இயேசு "முதல்-பேரான"
தனித்துவமான மற்றும் தந்தையின் ஒரே பேறான மகன். ரோமர் 8:29; கொலோ.
1:15; 1:18; எபி. 1:6; வெளி. 1:5; யோ. 1:14; 1:18;
3:16 3:18; 1யோ.4:9. அதுமட்டுமல்லாமல் நியமனத்தின்
மூலம் யூதா கோத்திரத்தில் முதல் பிறந்தவராவார்.
மாம்சத்தின்படி
ரூபன் யாக்கோபின் முதல் பிறந்த மகன் என்றாலும், அவர் தவறான நடத்தை மூலம் தான் சம்பாதிக்க
வேண்டிய பரம்பரை உரிமையின் இரட்டை பகுதி உரிமைகளை இந்த யூதாவிடம் இழந்துவிட்டார். ஆதி. 49:3-4; 1நாளா. 5:1-2.
இந்த
காரணத்தினாலேயே "ஆட்சியாளரின் செங்கோல்" யூதாவுக்கு சொந்தமானது. ஆதி. 49:10; எண். 24:17.
யூதாவின் மூத்த சகோதரர்களான
சிமியோனும் லேவியும் ரூபனின் இடத்தைப் பெறுவதற்கு ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்
என்று குறிப்பாக சொல்லப்படவில்லை என்றாலும்,
ஆதியாகமம் 34ம் அதிகாரத்தில் நடந்த சம்பவமானது இத்துடன்
சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஆதி. 34:30, ஆதி. 49:5-7.
யூதாவிற்கு
முன்னால் இருந்த மூன்று சகோதரர்களும் தவறான நடத்தைக்கு தகுதி நீக்கம்
செய்யப்பட்டதைப் போலவே,
தேவன் மீது அசாதாரண விதிவிலக்கான அதீத அன்பு தாவீதை உயர்வு பெற வைத்தது.
தாவீது ஈசாயின் புத்திரர்களில்
இளையவர், ஆனாலும் தேவன் மீது அவர் வைத்திருந்த இருதயத்தினாலும் அவர் தன் சகோதரரைக்
காட்டிலும் முதல் இடத்தில் காணப்பட்டார்.
நம்முடைய
கர்த்தருடைய வம்சாவளியைப் பொறுத்தவரை யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு
முக்கிய காரணம், அந்த கோத்திரத்தில் தாவீது வருகிறார்.
இயேசு
கிறிஸ்து - தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டவர். மத். 1:1; 9:27; 22:42; லூக்கா 1:32; 1:75;
ரோமர் 1:4-5; 2 தீமோ. 2:8; வெளி. 22:16;
யாக்கோபு
கோத்திரப் பிதாக்களின் தலைவன். 12 கோத்திரங்களும் யாக்கோபிலிருந்து துவங்குகிறது. அந்த
கோத்திரத்தில் முதல் பேரானவராக யூதா வருகிறார். ஆகவே வாக்குத்தத்தத்தின்படி இயேசு யூதா
கோத்திரத்தில் பிறந்தார். ஆதி. 49:28
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக