*பதில்* : ஏன் உப்பு தூணாக மாற்றப்பட்டார் என்ற நேரடி தகவல் நமக்கு வேதத்தில் இல்லை.
ஆனால், இங்கே சில கூடுதல் தகவல்களை பகிர்வது அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும். ஆவிக்குரிய அர்த்தம் என்பதல்ல… ஒரு தகவல் மாத்திரமே.
உப்பு வாழ்க்கையின் ஒரு அடிப்படைத் தேவையாகும். சுவையூட்டல், பாதுகாத்தல், கிருமிநாசினி, சடங்குகளில் ஒரு பங்காகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக நியாயபிரமாண காலத்தில் இது இன்றியமையாததாக இருந்தது.
பலியின் போது, உப்பு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்பதை லேவி. 2:13 மற்றும் எசே. 43:24 தெளிவுபடுத்துகின்றன.
இது தேவாலயத்தில் வழங்கப்பட்ட தூபத்தின் ஒரு பகுதியாகும். யாத். 30:35. மேலும், புதிதாகப் பிறந்த குழந்தைகள் உப்பினால் சுத்திகரிக்கப்பட்டனர். எசே. 16:4
சோதோம் மற்றும் கொமோரா பட்டணங்கள் கந்தகம் மற்றும் நெருப்பினால் அழிக்கப்பட்டது. ஆதி. 19:24. ஆகவே, இன்று வரை அதில் ஒரு புல்லும் பூண்டும் முளைப்பதில்லை. சங். 107:34, யோபு 39:6; எரே. 17:6.
நான் அந்த இடத்தை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். இன்றளவும் அது பாலைவனம் மற்றும் படிகாரம் அல்லது கந்தகம் நிறைந்து காணப்படுகிறது. Dead Sea என்று சொல்லப்படும் சாவுக்கடல் அருகாமையில் தான் இந்த பட்டணங்கள் உள்ளது. அங்கு உயர்ந்து நிற்கும் ஒரு கல்லை, இன்றளவும் அது தான் லோத்தின் மனைவி என்று சொல்லப்படுகிறது. உண்மையோ, கற்பனையோ ஆனால் அது ஒரு சுற்றலா தளமாக இன்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக