*பல உறுப்புகள் நிறைந்த சரீரம் ஒன்றாயிருக்கிறது*
By : Eddy Joel Silsbee
பரலோக பிதாவின் குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒருமனமாகக் கூடினார்கள் என்று நெகேமியா 8:1ன் படி தமிழ் வேதாகமத்தில் இருந்தாலும்;
மூல பாஷையிலும் ஆங்கிலத்திலும் *ஒரே மனிதனாக* கூடினார்கள் அதாவது “they all gathered as One Man” என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
எவ்வளவு அருமையான வார்த்தை!!
தனித்தனியே பெருந்திரளாக ஜனங்கள் இருந்தபோதும் “ஒரே மனிதனாக” நின்றார்கள் என்று மற்றவர்கள் சொல்லும் படிக்கு கூடிவந்த அனைவரின் இருதயத்தில் ஒற்றுமை இருந்திருக்கிறது.
ஒற்றுமை என்பது பாகுபாடற்ற மனநிலைமை. பிலி. 2:2
ஒவ்வொரு தனி நபரும் வெவ்வேறு கருத்துக்களையும் தாலந்துகளையும் சிந்தனைகளையும் அறிவையும் உடையவர்களே. 1கொரி. 12:8-10
ஆனால்,
அனைத்தையும் பயன்படுத்தி *அனைவரது நோக்கமும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்ற ஒரே சிந்தையே* அவசியமாக இருப்பதால் ஏற்ற தாழ்வுகளை தங்களுக்குள் காண்பித்து வேறுபடுத்தாமல் சமநிலையை பிடிக்க வேண்டும். பிலி. 1:27, எபே. 4:3
சரீரத்தில் *அனைத்து உறுப்புகளுமே தனித்தன்மை வாய்ந்தது*.
இருதயத்தின் வேலையை கண் செய்வது இல்லை.
காலின் வேலையை காது செய்வதில்லை.
வாயின் வேலையை கைகள் செய்வதில்லை !!
ஆனாலும் அவைகள் தங்களுடைய திறமையையும் தனித்தன்மையையும் வலியுறுத்தாமல் முன்நிறுத்தாமல் அமைதியாக தங்கள் வேலையை செவ்வனே செய்வதால் *ஒரு சரீரமாய், சுகமாய் ஜீவிக்கிறது* !! 1கொரி. 12:21
அதுபோலவே,
செய்தி கொடுப்பவரோ, பாடல் பாடுகிறவரா, ஜெபிப்பவரோ, பந்தி நடத்துபவரோ அல்லது வேறு எந்த வகையிலும் சபைக்கு தூணும் ஆதாரமுமாய் இருக்கும் எவரும் தனிப்பெருமையுள்ளவர் அல்ல… அனைவரும் தங்கள் தங்கள் வேலையை உத்தமமாய் செய்யும்போது சபை சீரான வளர்ச்சிபெறும்.
சபை மக்களும் அப்படியே...
நாம் தனித்தனியாக இருந்தாலும்,
கிறிஸ்து மகிமைப்படும்படியாக *நாம் அனைவரும் ஒரே சீராய்* நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்யவேண்டும். எபே. 5:30
சபை (கூடுகை) ஒரு குடும்பம்.
ஒருமனம் என்பது தானாய் வருவது அல்ல, மாறாக அது உருவாக்கப்படவேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக