வெள்ளி, 22 மே, 2020

#960 - யாத்திராகமம் 13:11,12ல் கானான் தேசம் அடைந்ததும் முதற்பேற்றை பலியிட கூறுகிறார். மற்ற தேசங்களில் ஏன் கேட்கவில்லை.

#960 - *யாத்திராகமம் 13:11,12ல் கானான் தேசம் அடைந்ததும் முதற்பேற்றை பலியிட கூறுகிறார். மற்ற தேசங்களில் ஏன் கேட்கவில்லை*.

*பதில்*
இது பஸ்காவை குறித்து தேவன் சொன்னவை.

யாத். 13:1-4 கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம். ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.

புறப்பட்ட நோக்கம் கானான் வந்தடைய வேண்டும் என்பது. யாத். 13:8-11

தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் இந்த ஜனங்கள் கானான் தேசத்திற்கு வரும்போது நிறைவேறுகிறது. ஆதி. 15:19-21

அதன் நினைவுகூறுதலாக வந்து சேர்ந்த பிறகு அந்த இடத்தில் அந்த நாளில் அவர்களை கடைபிடிக்க சொல்கிறார் தேவன். யாத். 13:10

இந்த கட்டளை இஸ்ரவேலருக்கு வனாந்திர பிரயாணத்தின் ஆரம்ப நாளில் கொடுக்கப்பட்டது !!

இன்னும் 40 வருடம் அவர்கள் பிரயாணிப்பதை அறியாதிருந்தார்கள். !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக