#959 - *தேவாலயத்திற்கு காணிக்கைகள் செலுத்தப்படல் அவசியமா வேதாகமம் இதை
வலியுறுத்துகிறதா?*
*பதில்*
தொழுகை
என்பது 5 காரியங்களை குறிப்பதாகும்.
பாடல்
பாடுவது மாத்திரம் ஆராதனை என்று அழைப்பது வேதத்தின் படி தவறு.
மேலும்,
திருவிருந்து
ஆராதனை
திருமண
ஆராதனை
அடக்க
ஆராதனை
ஞானஸ்நான
ஆராதனை
ஜெப
ஆராதனை
உபவாச
ஆராதனை
ஆடல்
பாடல் ஆராதனை
பரலோக
ஆராதனை
பரவச
ஆராதனை
சுகமளிக்கும்
ஆராதனை
என்று
இப்படி பல வேறு வார்த்தைகளைக் கேட்டு உண்மையை, சத்தியத்தை, கிறிஸ்தவத்தை, மறந்து கிறிஸ்தவ மதத்தில் மூழ்கி மயக்கத்தில் கிடக்கிறது.
*தொழுகை என்றால் என்ன?*
தொழுகையில்
ஐந்து செயல்கள் வேதத்தில் காணமுடிகிறது :
அப்போஸ்தலரின் போதனை, ஐக்கியம், அப்பம் பிட்குதல் என்றழைக்கப்படும் கர்த்தருடைய பந்தி மற்றும் ஜெபம் -
அப்போஸ்தலர் 2:42
தேவ வார்த்தையிலிருந்து
கற்றுக்கொள்வது தொழுகையின் செயல் - நெகேமியா 8: 2-6
சிலுவையின் செய்தி தேவனை மகிமைப்படுத்துகிறது
- 1 கொரிந்தியர் 1:18, 26-2: 5
ஐக்கியம், விசுவாசிகளின்
ஒற்றுமை, தொழுகையின் ஒரு முக்கிய அம்சமாகும் - 1 கொரிந்தியர்
1: 9-10; யோவான் 17: 20-23
கர்த்தருடைய பந்தியைப் பகிர்ந்து கொள்வது
ஒற்றுமையை வெளிப்படுத்தும் வழி - 1 கொரிந்தியர் 10: 16-18; 11:17, 18, 20, 22, 33
கர்த்தருடைய பந்தியில் பங்கெடுக்கும்
போது கிறிஸ்துவின் சிலுவை பலிக்கு மரியாதையும் மதிப்பையும் அளிக்கிறோம். அவருடைய
மரணத்தை நினைவு கூறுகிறோம். அவருடைய வருகையை மற்றவர்களுக்கு அறிவிக்க கடனாளியாக
இருக்கிறோம். புதிய உடன்படிக்கையில் இருக்கிறோம் என்பதை இது நமக்கு நினைவு படுத்துகிறது.
1 கொரிந்தியர் 11: 23-26.
ஜெபத்திற்கான வார்த்தையின் அர்த்தம் தேவனை
தொழுது கொள்வது - 1 தீமோத்தேயு 2: 1-2;
பிலிப்பியர் 4: 6
இது தேவனைப் புகழ்வது - மத்தேயு 6: 9; எபிரெயர்
13:15
இது தேவனுக்கு நன்றி செலுத்துவது - யோவான் 6:11
சபையானது ஒரு ஜெபவீடாக இருக்கும் - ஏசாயா 56:7
பாடுவதும் தொழுகையின் ஒரு செயல் - 1 கொரிந்தியர்
14:15; எபேசியர்
5:19; கொலோசெயர் 3: 16-17; எபிரெயர்
2:12
(காணிக்கை) கொடுப்பதும் தொழுகையின்
ஒரு அங்கம் அல்லது செயல் - 2 கொரிந்தியர் 9: 6-7
இது ஐக்கியத்தின் மற்றொரு செயல் -
ரோமர் 15:26; பிலிப்பியர் 1: 5; 4: 15-18
கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடும்போது இது
செய்யப்படுகிறது - 1 கொரிந்தியர் 16: 1-2
பலி செலுத்துவதை ஆபிரகாம் தொழுகை
என்றார். ஆதியாகமம் 22: 5
மோசேயும் ஆரோனும் மூப்பரும் பலிசெலுத்துவதை
தொழுகை அல்லது பணிந்து கொள்ளுதல் என்று கூறப்படுகிறது - யாத்திராகமம் 24
தேசத்தின் முதல் பலன்களை எடுத்து, அவற்றை தேவன் முன்
கொண்டு வந்து, இஸ்ரவேல் ஜனம் பணிந்து கொண்டது - உபாகமம் 26: 8-10
தகனபலி செலுத்தித் தீருமட்டும்
சபையார் தேவனைப் பணிந்து கொண்டார்கள். 2 நாளாகமம் 29: 28-29
சாமுவேலின் தந்தை ஆண்டுதோறும் பலியிட்டு
தேவனைத் தொழுது கொண்டார். 1 சாமுவேல் 1: 3
கொடுக்கப்படும்
காணிக்கை தேவனுக்கு சுகந்த வாசனையான உகந்த பலி. பிலி 4:15-18
ஆபேல்
காணிக்கையை கொண்டுவந்த போது மேன்மையான பலி என்கிறது வேதம் – ஆதி 4:3-5, எபி 11:4
நன்மை
செய்யப்படுவதற்காக கொடுக்கப்படும் காணிக்கையில் தேவன் பிரியமாக இருக்கிறார் – எபி. 13:15-16
1-பாடல்
பாடுவது
2-தேவ
செய்தி கேட்பது
3-ஜெபிப்பது
4-கர்த்தருடைய
பந்தியில் பங்கெடுப்பது
5-காணிக்கை
செலுத்துவது
என்ற
இந்த 5 பகுதிகளும் – தொழுகையை குறிக்கிறது.
வாரத்தின்
முதல் நாளில் சீஷர்கள் கூடின போது காணிக்கை சேர்த்தார்கள் என்று வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
1கொரி. 16:1-3
ஆகவே
சபை கூடிவரும் போது சேர்த்து வைத்த / திட்டம் செய்த காணிக்கையை போடுவது – தேவனுடைய
தொழுகையைக் குறிக்கிறது.
நீங்கள்
ஏறெடுக்கும் தொழுகை முழுமைப் பெறும் படியாக ஐந்து பாகங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.
அப்படிப்பட்ட
பலிகளில் தேவன் பிரியமாயிருக்கிறார். எபி. 13:16
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக