வியாழன், 21 மே, 2020

#956 - அண்ணகர்கள் (திருநங்கை அல்லது திருநம்பி) பற்றி வேதாகமம் என்னவெல்லாம் சொல்கிறது?

#956 - *அண்ணகர்கள் (திருநங்கை அல்லது திருநம்பி) பற்றி வேதாகமம் என்னவெல்லாம் சொல்கிறது? அது தப்பா கரெக்டா?*

*பதில்*
தேவன் உருவாக்கினது ஆண் மற்றும் பெண்ணை.

மூன்றாம் பாலர் என்று நாம் அழைப்பவர்கள் - சரீர வளர்ச்சி குறைபாடுகளால் ஏற்படுத்தப்பட்டவர்கள்.

தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார் இயேசு கிறிஸ்து (மத். 19:12)

அரசவையில் இராணியாருக்கு பாதுகாவலராக எப்போதும் அண்ணகர்களை தான் நியமிப்பார்கள் - அப். 8:27.  

எல்லா ஆண்களும் யோசேப்பை போல உத்தமமாய் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லையே. ஆதி. 39:7-9

அவ்வாறு சரீர பெலவீனத்தால் அண்ணகர்களாக பிறந்தவர்களோ அல்லது அண்ணகராக்கப்பட்டவரோ நியாயப்பிரமானத்தின்படி –

1- இஸ்ரவேலரோடு சேர்ந்து ஆராதிக்க தடைசெய்யப்பட்டார்கள்.

2- ஆசாரிய வேலை செய்ய தடை செய்யபட்டார்கள்.

லேவி. 21:17-21, உபா. 23:1-3

ஆனால் தேவனுடைய மிகப்பெரிய கிருபையால் – கிறிஸ்துவின் சிலுவைக்குப் பின்னர் –  எதிரிடையாக இருந்த கையெழுத்தைக் குலைத்துப் போட்டு சிலுவையில் ஆணியடித்து நியாயபிரமாணத்தை முடிவுக்கு கொண்டு வந்து, புதிய ஏற்பாட்டில் / புதிய கட்டளையில் / புதிய நியமனத்தில் கிறிஸ்துவானவர் மூலமாக தேவன் – அண்ணகர்களையும் அல்லது எவரையும் தள்ளிவைக்காமல் அனைவரையும் தன் குமாரனுடைய இராஜ்ஜியமாகிய சபையில் சேர்த்தார்.

தேவனுடைய வீடு அனைவருக்கும் தேவனுடைய ஜெபவீடு எனப்படும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் நாட்களிலேயே தேவன் அதை வெளிப்படுத்தினார் (ஏசா. 56:3-5)

அந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவை அப். 8:28-40ல் காண்கிறோம்.

இந்த கிருபையைக் கூட உணராமல் அண்ணகர் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் கிறிஸ்தவ மத ஊழியர்களும் மோசேயின் நியாயபிரமாணத்தை சொந்தம் கொண்டாடுவது எவ்வளவு அறிவீனம் என்பதை வெளிக்காட்டுகிறது. 1தீமோ. 1:7

வேதத்தில் பிரதானிகள் என்று சொல்லப்படும் அநேக இடங்கள் அண்ணகர்களைக் குறிக்கிறது !!

2இரா. 9:32 அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.

எஸ்தர் 2:3 அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

உபா. 23:1 விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

ஏசா. 56:3-5 கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.

என் ஓய்வு நாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.

எரே. 38:7 அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.

எரே. 52:25 நகரத்திலோவென்றால் அவன் யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழுபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

தானி. 1:3-4 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.

ஆதி. 39:1 யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.

இராஜாங்கத்தில் அல்லது அரசகுடும்பத்தில் அண்ணகர்கள் அநேக பொருப்புகளில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக