#955 - *அப்போஸ்தலர் 5:37ல் சொல்லப்படும் கலிலேயனாகிய யூதாஸ் என்பவர் யார்? விளக்கவும்*
*பதில்*
முதலாம்
குடிமதிப்பெழுதப்பட்ட இயேசு பிறந்த காலத்தில் இந்த யூதாஸ் வாழ்ந்து
அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து ஜனங்களையும் எதிர்க்க வைத்து அழிந்து போனார் என்ற
செய்தி மாத்திரமே இவரைக் குறித்து வேதத்தில் இந்த அப்5:37ல் மாத்திரமே பார்க்கமுடிகிறது.
வழக்கமாக
வேறு தகவலை நான் ஆதாரத்திற்கு எடுப்பதில்லை. இந்த பிரத்யேக மனிதன் நம் ஆண்டவர் இயேசுவின்
வரலாற்றில் வருவதால் – அவரைக் குறித்து யூதர்களின் சரித்திரத்தில் தேடி எடுத்த தகவல்
உங்களுக்காக கீழே:
யூதேயாவில்
முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நேரத்தில் ரோமானியர்களுக்கு எதிரான
ஒரு பிரபலமான கிளர்ச்சியின் தலைவர்,
அதில் அவர் செய்த கிளர்ச்சி அழிந்து, அவரைப்
பின்பற்றுபவர்கள் கலைந்து சென்றனர் (அப்போஸ்தலர் 5:37); கவுலோனிடிஸ்
பட்டணத்தில் உள்ள கமலாவில் பிறந்தார்.
கி.பி
6 அல்லது 7ம் ஆண்டில், யூதர்களின் சம்பத்தைக் கணக்கிட குய்ரினஸ் யூதேயாவுக்கு வந்தபோது, இந்த யூதாஸ், ஒரு பரிசேயரான சாதோக்குடன் சேர்ந்து,
ஏராளமாக தங்களுக்கு ஆதரவாலர்களை திரட்டி அவர்களுக்குத் தலைமை தாங்கி,
கடுமையான எதிர்ப்பை வழங்கினார்.
இந்த
யூதாஸ் - யூத அரசை ஒரு குடியரசாக அறிவித்தார். கடவுளை மட்டும் ராஜாவாகவும்
ஆட்சியாளராகவும், அவருடைய சட்டங்கள் உச்சமாகவும் அங்கீகரிக்கப்பட்டன. கிளர்ச்சி தொடர்ந்து
பரவியது, சில இடங்களில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. யூதாஸ்
அழிந்த பிறகும், அவருடைய எண்ணங்கள் தொடர்ந்து அவன் கொள்கைகளைப்
பின்பற்றுபவர்களை உயிரூட்டியது.
அவரது இரண்டு மகன்களான ஜேக்கப்
மற்றும் சைமன் திபெரியஸ் அலெக்சாண்டரால் சிலுவையில் அறையப்பட்டனர். மற்றொரு மகன், மெனஹேம் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு அதிக செல்வாக்கும் பெலத்துடனும் சிக்காரியின் தலைவரானார். அவர்
இறுதியாக உயர் ஆசாரியக் கட்சியால் கொல்லப்பட்டார்.
இந்த தகவல் எடுக்கப்பட்ட ஆதாரத்தின்
வலைத்தகவல் கடைசியில் குறிப்பிட்டுள்ளேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக