வியாழன், 21 மே, 2020

#954 - நாமே தேவனுடைய ஆலயமாயிருக்க (1கொரி 3:15-16) இந்த சரீரம் பரலோகம் போகுமா?

#954 - *நாமே தேவனுடைய ஆலயமாயிருக்க (1கொரி 3:15-16) இந்த சரீரம் பரலோகம் போகுமா?* Does the flesh go to heaven? 1 cor 3:15,16 our flesh is god's temple so does the god's temple go to heaven....?

*பதில்*
மண் பூமிக்குரியது. வானமும் பூமியும் கிறிஸ்துவின் வருகையில் அழிந்து போகும். எபி. 1:10-12

யோபு இந்த மண் சரீரத்தை அழிவு என்றும் புழு என்றும் குறிப்பிடுகிறார். யோபு 17:14

மாமிசம் என்று சொல்லப்படுகிற பூமிக்குரிய அழிந்து போகும் இந்த மண்ணினால் உண்டாக்கப்பட்ட சரீரமானது - நித்திய ஜீவனுக்குள் / பரலோகத்திற்குள் பிரவேசிக்காது. 1கொரி. 15:50

சரீர மரணத்திற்கு பின் உள்ள நித்திய வாழ்க்கையை குறித்து பவுல் கொரிந்தியருக்கு எழுதும் போது ஜென்ம சரீரத்தையும் ஆவிக்குரிய சரீரத்தையும் வேறுபடுத்தி – ஜென்ம சரீரமானது பரலோகத்திற்குள் பிரவேசிக்காது என்று குறிப்பிடுகிறார். 1கொரி. 15:44-48

மேலும் ஆவியும் ஆத்துமாவும் சரீரத்திலிருந்து பிரிந்ததும் – சரீரமானது தான் முன் எடுக்கப்பட்ட மண்னுடன் சேர்ந்து விடுகிறது. ஆதி. 2:7, ஆதி. 3:19, யோபு 33:6, சங். 103:14, 2கொரி. 5:1, ஏசா. 64:8

ஆவியும் ஆத்மாவும் சரீரத்தில் இருக்கும் வரை – தான் எடுக்கப்பட்ட மண்ணிற்காக மனிதன் வேலை செய்ய வேண்டும். ஆதி. 3:23

மனிதன் தான் செய்த பாவத்தின் நிமித்தம் பூமியானது சபிக்கப்பட்டது. ஆதி. 3:17

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் மரித்த அனைவருக்கும் புதியதாக நித்திய காலமாய் அழிவில்லாத ஆவிக்குரிய சரீரம் கொடுக்கப்படுகிறது. 1கொரி. 15:51-52

மண்ணினால் உண்டான சரீரம் பரலோகம் செல்வதில்லை.

நாம் கிறிஸ்தவர்களாகும் போது, தேவனுடைய பிள்ளைகள் என்று அங்கீகரிக்கப்படுகிறோம். அதோடு நில்லாமல் பரலோகத்தில் தேவனுடைய ஒரு சுதந்தரத்தைப் பெறுகிறோம். கலா. 3: 26-29, யோ. 1:12.

நாம் இரட்சிக்கப்படுகையில், இராஜ்ஜியத்தில் நுழைகிறோம். கொலோ. 1:13-14. அதாவது சபை என்று பிரித்தெடுக்கப்படுகிறோம். அந்த சபைக்கு தலையாக மோசே அல்ல கிறிஸ்து இருக்கிறார். கொலோ. 1:18. அப்படியென்றால் இராஜ்ஜியம் என்பதும் சபை என்பதும் ஒரே பதத்தை குறிக்கிறதென்பதைக் கவனிக்கவும்.

இதனிமித்தம் பிரித்தெடுக்கப்பட்டவர்களாகிய நம்மில் வசிக்கிறார். ஆகவே நாம் தேவாலயம் எனப்படுகிறோம். இந்த தேவாலயமானது பின்னர் வரும் நிரந்தரமான பரலோகத்திற்குள் பிரவேசிக்க தயாராகிறது. தன் மரணம் வரைக்கும் அல்லது கிறிஸ்துவின் வருகைவரைக்கும் தன் இரட்சிப்பைக் காத்துக்கொண்ட அந்த ஆத்துமாவானது புதிய அழிவில்லாத சரீரத்தோடு பரலோகத்திற்குள் பிரவேசிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக