#953 - *இயேசு கிறிஸ்துவின் காலத்தில் நேரத்தை எப்படி அளவிட்டார்கள்?*
அதாவது மூன்றாம் மணி வேளை என்றெல்லாம் சொல்கிறார்களே அதை பற்றி தயவாய் விளக்கவும்
எ.கா. : ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும்
தேவாலயத்துக்குப் போனார்கள். அப். 3:1
*பதில்*
ஆதியாகமம்
1:5ல்,
சாயங்காலமும் விடியற்காலமும் ஆகி ஒரு நாள் என்று தேவன்
தெரிவிக்கிறார்.
அதாவது
சூரிய அஸ்தமனம் தொடங்கி அடுத்த சூரிய அஸ்தமனத்திற்குச் இடையில் இருப்பது ஒரு நாள் என்று
தேவன் கணக்கிட்டார்.
இக்காலங்களில்
நாம் நள்ளிரவு இரவு துவங்கி அடுத்த நள்ளிரவில் ஒரு நாள் என்று கணக்கில் கொள்கிறோம்.
மேலும்
ஆதியாகமம் 2:2-3 மற்றும் யாத்திராகமம் 20:11 - ஒரு வாரம் ஏழு
நாட்கள் கொண்டதாக வரையறுக்கப்படுகிறது.
வேலைக்கு
ஆறு நாட்கள் மற்றும் ஓய்வெடுக்க ஒரு நாள்.
ஒரு
நாள் கணக்கு எப்படி எடுத்தார்கள்?
சூரிய
அஸ்தமனத்திலிருந்து புதிய நாள் தொடங்கியது என்று ஆதி 1:5ல் பார்க்கிறோம்.
நாமோ
புதிய நாளின் தொடக்கத்தை நள்ளிரவில் துவங்குகிறோம். தேவனுடைய கணக்கு சூரிய
அஸ்தமனத்தில் துவங்கியது.
அதாவது
வேலையை ஆரம்பித்து ஓய்வெடுப்பதல்ல - ஓய்வெடுத்து பின்னர் வேலை செய்வது !!
இயேசுவின்
காலப்பகுதியில், ஒரு நாள் 12 மணி நேரமாகப் பிரிக்கப்படுவது பொதுவாக கவனிக்கப்படுகிறது.
உதாரணமாக
11ம் மணி நேரத்தில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் உவமை (மத். 20:9).
ஆறாவது
மணி நேரத்தில் கிணற்றில் இயேசு சமாரியப் பெண்ணைச் சந்தித்ததைப் பார்க்கிறோம். (யோ. 4:6).
மூன்றாம்
மணி நேரத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஒன்பதாம் மணி நேரத்தில் தன் ஜீவனைக்
கொடுத்தார் என்று மாற்கு கூறுகிறார் மாற்கு 15:25,33.
இயந்திர
கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலத்தைப் போல அல்லாமல் அந்நாட்களில் துல்லியமாக
ஒரு மணிநேரம் கணக்கிடப்பட்டது அவ்வளவு சுலபமல்ல.
அவர்கள்
சூரியனின் அசைவை வைத்து மணித்துளிகளை கணக்கிட்டனர்.
சூரியன்
மறைந்து மறுபடியும் தெரிய வரும் காலக்கட்டம் 12 மணி நேரமாக வகுத்தனர்.
அதன்
அடிப்படையில் சூரியனின் நிழல் விழும் படியாக ஒரு தகட்டில் 12 மணி நேரத்தைக்
குறியிட்டு அதன் அடிப்படையில் நேரத்தைக் கணக்கிட்டனர். 2இரா. 20:9-11, ஏசா. 38:8
காலையில்
சூரியன் தெரிய ஆரம்பிக்கும் வேளை 1ம் மணி என்றும்... நடு வானில் உச்சியில்
நிற்கும் போது 6ம் மணி என்றும் மறையும் போது 12ம் மணி என்றும் கணக்கிடப்பட்டது.
நாம்
வைத்திருக்கும் இயந்திர கடிகாரம் மூலம் ஒரு நாள் 24 மணி நேரம் என்று
கணக்கிடுகிறோம்.
அவர்களோ
பகல் 12மணி நேரமும் இரவு 12 மணி நேரம் என்றும் கணக்கிட்டார்கள். இரவில் நிழல்
தெரியாதே !!
இரவு
நேரங்களைப் பொறுத்தவரை,
விஷயங்கள் இன்னும் தெளிவற்றவை. மத். 14:25
அவர்கள்
கணக்கில் பகல் 1ம் மணி என்பது நம் கடிகாரத்தில் காலை 6மணி.
பகல்
3ம் மணி என்பது – நம் கடிகாரத்தில் (6+3) காலை 9மணி
பகல்
6ம் மணி என்பது - நம் கடிகாரத்தில் (6+6) மதியம் 12மணி
பகல்
9ம் மணி என்பது - நம் கடிகாரத்தில் (6+9) மாலை 3மணி
பகல்
12ம் மணி என்பது - நம் கடிகாரத்தில் (6+12) மாலை 6மணி
இன்னும்
தெளிவாக புரிந்து கொள்ள ஒரு வீடியோவை இந்த பதிவிற்கு பின்னர் அனுப்புகிறேன்
யூட்யூபில் எடுத்தது. இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
https://www.youtube.com/watch?v=6BDtaVJPRlQ
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக