வியாழன், 21 மே, 2020

#951 - சகேயுவை குறித்த லூக்கா 19 :2-9 பகுதியின் விளக்கம் தேவை

#951 - *சகேயுவை குறித்த லூக்கா 19 :2-9 பகுதியின் விளக்கம் தேவை*

*பதில்*
ஆயக்காரர் என்றால் வரி வசூலிப்பவர்கள்.

சகேயு – அப்படிப்பட்ட ஆயக்காரர்கள் அனைவருக்கும் தலைவனாக இருந்தார். லூக்கா 19:2

எரிகோ பட்டணத்தில் வசித்தவர்.

எரிகோ பட்டணம் – சவக்கடலானது வணிகத்திற்கு பிரபலமானது. கணிசமான அளவு பால்சத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதியும் நடைபெற்ற ஒர் வர்த்தக நகரம். அதிகமாக வரி வசூல் பெற்ற வணிக வாயில் அது.

மேலும் சகேயு ஒரு பணக்காரனாக இருப்பதற்கு இது முக்கிய காரணமாகும்.

இக்காலத்திலும் கூட – நீங்கள் காரில் பட்டணம் விட்டு பட்டணம் பிரயாணம் செய்யும் போது – டோல்கேட்டில் (சுங்கச் சாவடியில்) உங்களை நிறுத்தி கட்டணம் கேட்கும் போது என்றாவது சந்தோஷமாக/உற்சாகமாக பணத்தை அவர்களுக்கு கொடுத்ததுண்டா? மனதில் ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க வேண்டா வெறுப்பாக அவர்களுக்கு கொடுப்பது அநுபவம்.

அது போலவே இந்த சகேயுவிற்கும் மக்கள் மத்தியில் எந்த அந்தஸ்தும் கிடையாது. ஆயக்காரர்கள் என்றால் பாவிகள் என்ற ஒரு எண்ணமும் ஜனங்கள் மத்தியில் இருந்தது. மத் 9:10-11, 11:19, 21:31, மாற்கு 2:15-16, லூக்கா 15:1

சகேயு – குள்ளனாக இருந்தபடியால், எருசலேமுக்குச் செல்லும் வழியில் எரிகோவைக் கடந்து செல்லும்போது கிறிஸ்துவைப் பற்றி திரண்டிருந்த கூட்டத்தினருக்கு முன்பாக அவர் விரைந்து சென்று, அவரைக் காணும்படி அங்கிருந்த காட்டு அத்தி மரம் ஒன்றில் ஏறினார்.

இயேசு கிறிஸ்து அங்கு வந்து சேர்ந்த போது – சகேயுவின் ஆர்வத்தையும் மனந்திரும்புதலுக்கேற்ற உள்ளத்தையும் அறிந்து அவரைப் பெயர் சொல்லி அழைத்து அவர் வீட்டிற்குள்ளேயே பிரவேசித்தார்.

மனந்திரும்ப விரும்பும் எந்த ஒரு பாவியான தனி நபரையும் – கிறிஸ்து விடமாட்டார் என்பது எவ்வளவு பெரிய உதாரணம் இது !!

ஊர் ஜனங்களின் கூற்றைக் கவனிக்காமல் – கிறிஸ்து அந்த ஒரு பாவியின் நிமித்தம் அங்கு சென்றதை நாம் கவனிக்கும் போது – நாம் எந்த சூழ்நிலையிலும் அவரைத் தேடினால் அவர் நம்மை இரட்சிக்க வல்லவர் என்பதை உணர வேண்டும். லூக்கா 19:7, 1தீமோ 1:15

கிறிஸ்து உள்ளத்தில் வந்ததும் – தானாக மனந்திரும்புதல் நடந்தேறுகிறது !! - அதற்கான கிரியையும் “உடனே” அங்கு நடைபெறுகிறது. லூக்கா 19:8

நியாயப் பிரமாணத்தின்படி தன் தவறான நடவடிக்கைக்கானத் தீர்வைக் திரும்ப செலுத்துகிறார். யாத் 22:1-4, லேவி 6:1-6

மனந்திரும்புதலை கண்ட தேவன் – இந்த வீடு இரட்சிப்பிற்குள்ளானது என்றார் – லூக்கா 19:9

உண்மையான அதே மரம் தானோ என்பதை அறியோம் – ஆனால் 2016ல் நான் எரிகோ போயிருந்த பொழுது – ஒரு மிகப்பெரிய அத்தி மரத்தை காண்பித்து இதில் தான் சகேயு ஏறினார் என்று சரித்திர பாதுகாவலோடு வைக்கப்பட்ட, இன்றும் தளிர்த்து நிற்கும் ஓர் மரத்தைக் காண்பித்தார்கள் !!

மேடைகளில் பல ஊழியர்கள் உருக்கமாக சொல்வது போல அந்த மரம் புழுநிறைந்ததாக நாங்கள் காணவில்லை !! முருங்கை மரத்தில் கம்பளி புழுக்கள் குளிர் காலத்தில் மொயத்துக் கொண்டிருப்பது போல அப்படி அந்த அத்தி மரத்தில் புழு படர்ந்திருக்கும் பழக்கம் எந்த கால சூழ்நிலையிலும் இருந்ததாக அவர்கள் சொல்லவும் இல்லை.

இயேசுவைக் காண புழு உள்ள மரத்தில் ஏறினாரா புழு இல்லாத மரத்தில் ஏறினாரா என்பதை ஆராய்வதைக் காட்டிலும் மனந்திரும்பும்படி அவர் மனம் இருந்ததை நாம் கற்றுக்கொள்வது முக்கியம்.

அந்த நாளிலே மனந்திரும்புதலும் அதற்கான முயற்சியும் இரட்சிப்பும் தேடி வந்தது...

அது போலவே – வசனத்தைக் கேட்டதும் விசுவாசித்து மனந்திரும்பி கிறிஸ்துவை அறிக்கையிட்டு பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுப்பதற்கு அந்த க்ஷனமே / இரவிலே தானே / பிரயாணம் போய்க்கொண்டிருந்த பொழுதே முடிவு எடுத்த அந்த சிறைச்சாலை அதிகாரியைப்போல, எத்தியோப்பிய மந்திரியைப்போல நீங்களும் / மனந்திரும்பாதவர்களும் கீழ்படிய இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக