#932 - *இந்த தைலத்துக்கும், ஜெப எண்ணைக்கும் உள்ள ஆசீர்வாதத்தைப் பற்றி விளக்கவும்*.
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும் … சங்கீதம் 133:2
இந்த தைலத்துக்கும், ஜெப எண்ணைக்கும் உள்ள ஆசீர்வாதத்தைப் பற்றி விளக்கவும்.
*பதில்*
மூன்றே வசனமாக அடங்கிய இந்த அற்புதமான பாடல் வரிகள் ஒற்றுமையை குறித்து பாடப்பட்ட பாடல்.
சங். 133:1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங். 133:2 அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,
சங். 133:3 எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
நியாயபிரமாண காலத்தில் இந்த பாடல் எழுதப்பட்டது.
ஆரோன் – பிரதான ஆசாரியன். எர்மோன் மலை சீயோன் பர்வதம் என்பதும் இஸ்ரவேல் தேசத்து உயர்ந்த மலை.
ஆரோன் மற்றும் மலைகள் – தலைமையை குறிக்கிறது.
முதல் வசனத்தில் சொல்லப்படும் “சகோதர ஒற்றுமை” என்பது தலைமைத்துவத்தில் துவங்கி தலைமையும் அபரிதமாக நிறைந்து (தாடியிலும் அங்கியிலும் வடியும் அளவிற்கு) அவரையும் தாண்டி அவருக்கு கீழேயிருக்கும் அனைவருக்கும் அந்த ஒற்றுமை எண்ணம் போய் சேர வேண்டும் என்பதே... அவ்வாறு ஒற்றுமையாக இருக்கும் கூட்டத்திற்கு பரிசாக கிடைப்பது ஆசீர்வாதமும் ஜீவனும் (வ3) !!
எவ்வளவு அருமையான பாடல் வரிகள்...
புதிய ஏற்பாட்டில் இந்த குறிப்பை எவ்வளவு அழகாக கிறிஸ்து நமக்குப் போதிப்பதை கீழே கவனியுங்கள் :
மத். 18:20 ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே *கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்* என்றார்.
*இருக்கிறேன்* என்ற வார்த்தையை அறியாமல் எங்கு அவர் நாமத்தில் கூடுகிறோமோ அங்கு அவர் *இருப்பேன்* என்பதாக சொல்வார்கள் ....
இருக்கிறேன் என்பது நிகழ்காலத்தை குறிக்கும் வார்த்தை... அவர் நாமத்தில் கூடின பின்பு – “வாரும் வாரும்” என்று கதறி, கொட்டு அடித்து துள்ளிகுதித்து பாடி முடியும் போது “வந்து விட்டார்” என்று சொல்லி அவரை வரவேற்கும்படி எல்லாரும் கைகளை பலமாக தட்ட வேண்டிய அவசியமில்லை !!
வியாதியாய் இருப்பவன் மூப்பரை வரவழைப்பானாக. அவர்கள் வந்து கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி ஜெபிப்பார்கள் (யாக். 5:14) என்ற வசனத்தில் வரும் எண்ணெய் – மருந்தை குறிக்கிறது. இக்காலத்தில் இருப்பது போல் மாத்திரைகள் ஊசிகள் அப்போது கிடையாது. இயற்கை வளங்களான கற்றாழை, சோம்பு, கீலேயாத்தின் தைலம், சீரகம், அத்தி, களிம்பு, ஒலிவ எண்ணெய், திராட்சை ரசம் போன்றவை நேரடியாக அரைத்து வைத்தியத்திற்கு மருந்தாக பயன்படுத்திய காலம் அது – 1தீமோ. 5:23.
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? எரே. 8:22
வயிற்று வலி தீர – முழங்கால் போட்டு ஒழுங்கா ஜெபம் பண்ணு என்று தீமோத்தேயுவிற்கு பவுல் அறிவுரை சொல்லாமல் – கொஞ்சம் திராட்சை ரசம் குடி என்றார் – வயிற்றுவலி நிவாரணி !! 1தீமோ. 5:23.
கொப்பளங்களால் அவனுடைய துன்பத்தைத் தணிக்க, யோபு சாம்பலில் உட்கார்ந்து, அவனது கொதிப்பை ஒரு பானைச்சிரட்டையால் தடவிக்கொண்டார் (யோபு 2: 7-8).
இக்காலத்தில் ஒருவர் வியாதிப்பட்டால் – மூப்பர்களை அழைத்து தன் வியாதிக்காக அவர்கள் ஜெபம் பண்ணி வியாதிக்கு தேவையான மருந்துகளை அவர்கள் ஒழுங்கு செய்வது சகோதர அன்பை காண்பிக்கிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக