#933 - *பரிசேயர் சதுசேயர் வேதபாரகர் ஆசாரியர் மூப்பர் இவர்கள் ஒவ்வொருவரின் வேலை என்ன?* அவர்களுக்கான தகுதி என்ன? தேவாலயத்தில் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் என்னென்ன?
*பதில்*
இஸ்ரவேலர்களில் யூத மத கோட்பாடு மற்றும் மோசேயின் நியாயபிரமாணத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள் பரிசேயர் - சதுசேயர் என்பவர்கள் .
*இவர்களில் உள்ள வித்தியாசம்*:
*சதுசேயர்* – உயிர்தெழுதல் இல்லை என்பவர்கள் (Mat. 22:23
*பரிசேயர்* – உயிர்தெழுதல் உண்டு என்று நம்புபவர்கள் (அப். 23:6-8)
*சமாரியர்* –
சாலமோன் இராஜா மரித்ததும் அவன் குமாரன் ரெகோபெயாம் பட்டத்திற்கு வந்தார்.
ஜனங்களின் ஆலோசனையை கேட்காததினால் மொத்தம் உள்ள 12 கோத்திரத்தில் யூதா பென்யமீன் கோத்திரம் தவிர 10 கோத்திரத்தார் இஸ்ரேல் தேசத்தின் வடக்கு பக்கம் தனியாக பிரிந்து போனார்கள். அவர்கள் யெரோபெயாமை இராஜாவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் பகுதியல் வரும் இடத்திற்கு பெயர் சமாரியா. அங்கு வசித்தவர்கள் சமாரியர். மிக பொிய வரலாற்றின் ஆக சிறிய வரியில் சொல்லியிருக்கிறேன். (1 இரா. 12)
இந்த பிரிவுக்கு பின்னர் தெற்கு பகுதியில் ரெகோபெயாமோடு எருசலேம் நகரத்தை தலைமையிடமாக மீதமிருந்த 2 கோத்திரத்தையும் – *யூதர்கள்* என்று அழைக்கிப்படுகிறார்கள்.
பிரிவுக்கு முன்னர் – 12 கோத்திரத்தாரையும் இஸ்ரவேலர்கள் என்று சேர்த்து சொல்லப்பட்டு வந்தது.
பிரிவுக்கு பின்னர் உள்ள வேதாகம காலங்கள் – பிரிந்து போன 10 கோத்திரத்தையும் இஸ்ரவேலர்கள் என்றும் மற்ற 2 கோத்திரத்தையும் யூதர்கள் என்றும் குறிப்பிடுகிறது.
*வேதபாரகர்* என்றால் வேத சட்டங்களை பிரமாணங்களை எழுதுபவர்கள். நியா. 5:14
மோசேயின் சட்டங்களில் தேறினவர்கள் – எஸ்றா 7:6, சங். 45:1, மத். 12:28
அவர்கள் ஆசாரியர்களாகவும் இருந்தனர் – எஸ்றா 8:2-6
முக்கியமான குறிப்புகளை கோப்புகளை சுருள்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் – 2 இரா. 25:19, 2நாளா. 26:11
*ஆசாரியர்* : (பழைய ஏற்பாட்டுக் காலத்தில்) ஆசரிப்புக் கூடாரத்தில் எருசலேம் தேவ ஆலயத்தில் கர்த்தருடைய பணியை செய்யும்படி ஆரோனின் சந்ததியும் லேவி கோத்திரத்தாரிலும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு நியமிக்கப் பட்டவர்கள். எண். 16:5, 16:40, 2நாளா. 26:18, எண். 16:9-10
புதிய ஏற்பாட்டு காலத்தில் – யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்களோ அத்தனை பேரும் ஆசாரியர்கள். 1பேதுரு 2:5, 1பேதுரு 2:9.
புதிய ஏற்பாட்டு காலத்தில் தேவன் யாரையும் பிரத்தியட்சமாக ஆசாரிய ஊழியத்திற்கென்று அழைப்பதில்லை !! கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
*மூப்பர்கள்* :
மூப்பர்கள் பாஸ்டர்கள் கண்காணிகள் அல்லது பிஷப் என்கிற வார்த்தை சபைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
வேதம் இதை குறித்து என்ன சொல்கிறதென்று பார்ப்போம்:
ஆதி புத்தகமான கிரேக்க பாஷையில் எழுதப்பட்டவைகளில் (புதிய ஏற்பாட்டு) 3 கிரேக்க பதங்கள் இந்த வார்த்தையை அடிப்படையாக கொண்டுள்ளது.
பிரஸ்பூடிரோஸ் என்கிற வார்த்தைக்கு – மூப்பர் என்றும்
பொய்மென் என்கிற வார்த்தைக்கு – பாஸ்டர் அல்லது மேய்ப்பர் என்றும்
எபிஸ்கோபஸ் என்கிற வார்த்தைக்கு – கண்காணி என்றும் அர்த்தம் உள்ளது.
மேலே சொல்லப்பட்ட இந்த எல்லா வார்த்தையும் ஒரே அர்த்தத்தை அல்லது பதத்தை குறிக்கும் (அப். 20:17, 20:28, 1பேதுரு 5:1-3)
வேதத்தில் எங்கும் பன்மையிலேயே இந்த பதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சபையில் ஒற்றை தலைமைக்கு வேதத்தில் இடமில்லை !!
பாஸ்டர் என்று அழைக்கப்படுபவர் –
1- வயதானவராக இருக்க வேண்டும்
2- ஆணாக இருக்க வேண்டும்
3- திருமணமானவராக இருக்க வேண்டும்
4- சொந்த பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும் – அந்த பிள்ளைகளும் தேவனுக்குள் இருக்க வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் – மூப்பராகவோ பாஸ்டராகவோ கண்காணியாகவோ இருப்பதற்கு வேதம் அனுமதிக்கவில்லை.
5- பாஸ்டர் என்பவர் புதிய கிறிஸ்தவராகவும் இருக்க கூடாது (1தீமோ. 3:6)
வாசித்து பார்க்கவும் - தீத்து 1:5-9
மேலும் பாஸ்டர் என்று சொல்லப்படுபவர் – கீழ்கண்டவற்றில் தேறியிருக்க வேண்டும்:
- சபையை மேய்க்கும் அனுபவம் (அப். 20:28)
- போதிக்க அறிந்திருக்க வேண்டும் (1தீமோ. 3:2)
- முன் உதாரணமாக இருக்கவேண்டும் (எபி. 13:7)
- ஆத்துமாக்களை கவனிக்க வேண்டும் (எபி. 13:17)
- தவறான போதனையை கண்டிக்க தெரிந்திருக்க வேண்டும் (தீத்து 1:9)
வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் - பாஸ்டர் / மூப்பர் / கண்காணிகள் (பிஷப்) போன்ற எந்த பொருப்பிலும் – பெண்கள் பொறுப்பு வகிக்கு வேதம் இடமிளிக்கவில்லை.
மத். 23:8ம் வசனத்தின் படி - அனைவரும் “சகோதரர்” என்று அழைக்கப்பட வேண்டும்.
பாஸ்டர் / பிஷப் / கண்காணி / ரபீ / ரபூனி என்பதெல்லாம் வேலையின் பெயர். செய்யும் வேலையை பட்டமாக வைத்துக்கொள்ளக் கூடாது !!!
ஊழியக்காரன் என்று நாகரீகமாக அழைக்க விரும்புபவர்கள் தங்களை வேலைக்காரன் என்று தூய தமிழில் அழைக்க அனுமதிப்பார்களா?
மருத்துவரை கவுரவமாக டாக்டர் என்று அழைத்து பழகிவிட்ட சமுதாயம்
குப்பை சுத்தம் செய்பவர் என்று தங்கள் தொழிலை வைத்து அழைப்பதில்லையே !!
சகோதரர் என்றே நாம் அழைக்கப்படவேண்டும்
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
Brother,
பதிலளிநீக்குஊழியக்காரனுக்கும் வேலைக்காரனுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு என நினைக்கிறென்.
ஊழியர்கள் - Service is the moto but வேலைக்காரன் - Salary is the moto. Fix the salary before join duty
That's our understanding brother..
நீக்குbut both are same meaning..
pls see the verses below :
Lev 19:13 பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
2Ch 24:12 அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி கல்தச்சரையும், தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
1Ti 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
1Ti 5:18 போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே
1Co 3:12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
1Co 3:13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
1Co 3:14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
1Co 3:7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
1Co 3:8 மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
1Co 3:9 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
Joh 4:36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
Gen 24:61 அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள் மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.
Exo 14:5 ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.
Num 7:5 நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி. லேவியருக்கு அவரவர் வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.
**
Our wages are from Heaven-- That's the difference brother..
My phone is ready now.. can you pls fwd your question once again - so i will get in this mobile.. i will have to put this in the blog as comments...
thanks brother