#930 - *கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாக உறுவாக்கினார். பின்பு எதனால் உடல் உறுப்பு பாதிப்பு ஊனம் என பல பாதிப்புகள் ஏற்படுகிறது?*
*பதில்*
தேவன் உருவாக்கின அந்த மகிமையை பாவம் செய்த போது மனிதன் இழந்து விட்டான். ஆதி. 3:17
மனிதன் சுகமாய் வாழ்ந்து சாவு என்பதே இல்லாமல் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் வாய்ப்பையும் பாவம் செய்ததால் இழந்து போனான். ஆதி. 2:16, ஆதி. 3:22-24
பாவம் செய்ததின் விளைவாக வருத்தமும் சஞ்சலமும் வேதனையும் துன்பமும் மனிதன் பெற்றுக்கொண்டான். ஆதி. 3:17
அந்தப் பாவ சரீரத்தின் வித்தில் பிறந்த சந்ததியினராகிய நம் அனைவருக்கும் அதன் பலன் உண்டு.
சரீரம் மண்ணுக்கு திரும்பவேண்டும். ஆதி. 3:19, சங். 146:4
*நோய் எதனால் வருகிறது*?
தவறான செயல்களுக்கு தண்டனையாக நோய்கள் என்று பல பேர் நினைக்கிறார்கள்.
இது நேரடியாக ஒப்புக் கொள்ளப்படாவிட்டாலும் நம்மில் பலருக்கு அந்த எண்ணம் உண்டு.
யோபுவிற்கு வந்த கஷ்டமும் துன்பமும் சரீர உபாதைகளும் அவர் ஏதோ தவறு அல்லது பாவம் செய்திருக்கவேண்டும் என்று அவர் நண்பர்கள் கருதினர். யோபு 4:2-9, யோபு 8:2-9, யோபு 11:5,6.
புற்றுநோயால் ஒருவர் இறந்துவிட்டால் அவர் பெரிய பாவத்தை செய்ததால் தான் தண்டிக்கப்பட்டார் என்று பலர் தங்களில் நினைப்பது உண்டு.
ஆனால் யோபுவைப் பற்றி தேவன் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். யோபு 1:22; 2:10 - “இவையெல்லாவற்றிலும் யோபு பாவம் செய்யவில்லை என்றார்”. மேலும் யோபுவின் நண்பர்கள் பேசினது சரியானது அல்ல என்று கூறினார். யோபு 42: 7-9.
பல நேரங்களில் மனிதனின் பாவமான தேர்வுகள் / முடிவுகள் / தீர்மானங்கள் / பழக்கவழக்கங்கள் – நோயை வருவித்துக்கொள்கிறது என்பது உண்மை.
இந்த நோய்கள் பாவத்திற்கான தண்டனை அல்ல, அது அவர்களின் செயல்களின் விளைவுகள் மட்டுமே.
பாவம் உடல் நோயை ஏற்படுத்தாது. தவறான செயல்களே அதை கொண்டு வருகிறது.
எந்தவொரு மரண நோயையும் தேவன் மாற்ற வல்லவர். எசேக்கியாவின் வாழ்க்கையை நீட்டிக்க தேவனால் முடிந்தது (ஏசாயா 38:1-5).
இயேசு கிறிஸ்து பெரும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து அநேகரை சொஸ்தப்படுத்தினார் உயிரோடெழுப்பினார்:
மாற்கு 1:38-42 - தொழுநோயாளிகளைக் குணப்படுத்தினார்;
மாற்கு 5:25-34 - நீண்டகால நோயைக் குணப்படுத்தினார்;
யோ 11:39-45 - லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
நம்மைப் படைத்தது தேவன் (அப்போஸ்தலர் 17:26).
அவருடைய சித்தத்திற்குள் அவருடைய வல்லமை வரம்பற்றது.
நமக்கு சுதந்திரம் இருக்கும் வகையில் நம்மைப் படைத்தார். நாம் புத்திசாலிகள், நியாயப்படுத்தவும், நமக்கு வேண்டியதை நாமே தேர்வு செய்யவும் முடியும்.
அவருடைய படைப்புகளான நாம் அவருக்குச் சேவை செய்யத் தேர்ந்தெடுப்பதற்கு நம்முடைய விருப்பத்தின் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
கடவுள் மெஷின்களையோ ரோபோக்களையோ உருவாக்கவில்லை.
நாம் தெரிவுசெய்து அவரைத் தேடி அவரை நேசிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் (அப். 17:24-28; சங். 100).
நம்முடைய படைப்பாளருக்கு சேவை செய்வோமா இல்லையா என்பதைத் தேர்வுசெய்ய நமக்கு சுதந்திரம் உள்ளது.
அதே வேளையில் தேர்ந்தெடுப்பதற்கான நமது சுதந்திரம் மோசமான காரியங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
சுயத்தினாலோ அல்லது பிறரால் ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் காயங்களை நாம் கவனக்குறைவாக எடுத்த முடிவினால் ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு மருந்து அல்லது உணவை ஒவ்வாமை இருப்பதை அறியாமலேயே உட்கொள்வதன் விளைவை அறிந்திருக்கிறோம்.
அதுபோல சில சட்டவிரோத அல்லது ஒழுக்கக்கேடான காரியங்களை செய்வதன் மூலமும் பிரச்சனைக்குள்ளாகிறோம்.
அலைகள், பெருவெள்ளம் அல்லது சூறாவளி போன்ற அழிவுகரமான இயற்கை நிகழ்வுகளின் மூலமாகவும் நமக்கு நாச மோசங்கள் வருகிறது.
இந்த உலகம் நம் ஆத்மாவின் நிரந்தர வீடு அல்ல (எபிரெயர் 11:13-16) என்பதை உணர்த்துகிறது.
தேவனுடைய முன்னிலையில் நமக்கு ஒரு இடம் இருக்கிறது (வெளி. 21:22-27).
நித்தியத்துடன் ஒப்பிடுகையில் இங்குள்ள நம் வாழ்க்கை குறுகியதாகவும், நமக்கு நிச்சயமற்ற அளவு நேரம் இருப்பதாகவும் தெளிவாகக் கூறப்படுகிறது (யாக். 4:14).
நம் சரீர சதை வடிவமைப்பானது என்றென்றும் செயல்படும்படியாக வடிவமைக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் (ஆதி. 3:19; சங். 139:14).
எபிரெயர் 9:27 என்பது நம்முடைய யதார்த்தத்தின் கூற்று: இது ஒரு முறை இறப்பதற்கு மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. பிறப்பதற்கு ஒரு காலமும், இறக்க ஒரு காலமும் இருக்கிறது (பிர. 3:20).
வாழ்க்கை படத்தை வார்த்தைகளில் கவனிக்கவும் (பிர. 12:1-7):
வ1 கடினமான நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன, அது நகர கடினமாக இருக்கும், உடல்நிலை சரியில்லாமல் போகும்.
வ2 வாழ்க்கையின் வசந்தகாலம் மற்றும் வீழ்ச்சி.
வ3 நம் கைகள், கால்கள் போன்ற நம்பகமான கருவிகள் கூட காலப்போக்கில் பலவீனமடையும். பற்கள் குறைந்து, கண்கள் தோல்வியடைகின்றன.
வ4 உணவைத் தக்கவைக்க உதடுகளை மூடி வைக்க போராடுவோம். ஒரு சின்ன கோழி தூக்கம் வரும், உடனே முளிப்பு வரும், செவிகள் மந்தமடையும்.
வ5 வெயியே சுற்றி திரியும் ஆவல் குறைந்து போகும், தலைமுடி வெண்மையாகும், சிறிய விஷயங்கள் கூட சுமைகளாக மாறும். மாம்சீக ஆசைகள் குறைந்துவிடும், சாப்பிடுவது கூட வெறுப்பாக இருக்கும்.
வ6 வெள்ளி தண்டு நம் முதுகெலும்பு மற்றும் நரம்புகளை குறிக்கிறது. தங்க கிண்ணம் நம் மூளையை குறிக்கிறது. குடம் மற்றும் சக்கரம்: இரத்தமும் இதயமும் அனைத்தும் தோல்வியடைகின்றன- மனிதனின் வாழ்க்கை முடிகிறது.
நம் உடல்கள் இனி நம் ஆத்மாவுக்கு பொருந்தாதபோது நாம் புறப்படுவோம். நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த வாழ்க்கை தற்காலிகமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (2 கொரி 4:16-18).
நோய், மரணம் – நிச்சயமாக ஒரு நாள் நடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மோசமான விஷயங்கள் மோசமான தேர்வுகள் அல்லது இயற்கை சுழற்சிகள் மூலமாகவோ அல்லது நாம் மனிதர்களாக இருப்பதாலோ நிகழ்கின்றன.
உடல் நோய்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். ஆன்மீக நோயை மறந்து விட வேண்டாம். மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய நோய் நம்முடைய அழியாத ஆத்மாவுக்கு பாவத்திற்கான நமது மரண தேர்வால் ஏற்படுகிறது. பாவம் நம்மை கடவுளிடமிருந்து பிரித்து, இங்கே அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையையும், வரவிருக்கும் நித்தியத்தில் அவரிடமிருந்து பிரிவதையும் விளைவிக்கிறது.
அதற்கு நீங்கள் தீர்வு காண தயாராகுங்கள். உங்கள் ஆத்துமாவை சுத்தப்படுத்த இப்போதும் வாய்ப்பு உள்ளது.
சரீரம் மண்ணினால் ஆனது.
முறையில்லாத உணவு பழக்கத்தாலோ, சூழ்நிலையினாலோ, நம் தவறான தேர்வினாலோ, ஆரோய்க்கியமில்லாத ஆகாரத்தினாலோ, பாவ செய்கையினாலோ இப்படி பல கோணங்களில் சரீரத்தில் வியாதி வருகிறது. பாவம் செய்ததால் தான் வியாதி வருகிறது என்று தீர்க்கமாக யாரும் சொல்ல முடியாது.
யோ. 9:2-3 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக