புதன், 6 மே, 2020

#929 - சுய மரியாதையை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது??

#929 - *சுய மரியாதையை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?*

*பதில்*
பல வசனங்களை நாம் சுயமரியாதையைக் குறித்து காண முடியும்.
நாம் அனைவரும் தேவாதி தேவனுடைய பிள்ளைகள்.
இளவரசர் / இளவரசிகள்.
ஆசாரியர்கள். அழைக்கப்பட்டவர்கள். தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம்.

ஜனங்கள் கிறிஸ்தவர்களை காணும்போது – கிறிஸ்துவை காண்கிறார்கள் – கலா. 3:27

நம் இருதயத்தில் வல்லமையுள்ளவரும் வெளியில் உலக இரட்சகரும் இருந்தால் நடுவில் உள்ள நமக்கு என்ன கவலை !!

நம்பிக்கையும் தைரியமும் ராஜநடை போடுமே !!

பவுலின் சில வரிகள் ஞாபகம் வருகிறது:

2கொரி. 12:11 மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.

சத்தியத்தை சரியாக கற்றிருக்கும் போது தவறு யார் செய்தாலும் அமைதியாக இருக்க முடியாது என்பதற்கு பவுலும் ஒரு சான்று.

கலா. 2:11 .... பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.

2கொரி. 3:5 எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.

1தீமோ. 1:12-16 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்

கிறிஸ்தவர்கள் கீழ்கண்ட வகையை கவனமாக உணர்ந்து தங்களைப் பற்றிய ஒரு சிறப்பு பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாக இருக்கிறது.

*நாம் பலவீனமுள்ளவர்கள்:*
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார் என்பதைப் பார்த்தால், நம்மில் யாரும் அதை நிறைவேற்ற தகுதியானவர்கள் அல்ல என்பதைக் எளிதாக கண்டுக்கொள்ள முடியும் - 2 கொரி. 2:16

ஒரு போதும் நமக்கு நாமே எதையும் நிறைவேற்றிக்கொள்ள போதுமானவர்கள் அல்லவே அல்ல  - 2 கொரி. 3:5

கிறிஸ்துவை நாம் நங்கூரமாக வைக்காத வரைக்கும் நம்மால் எதுவுமே செய்ய முடியாது - யோ. 15:5

சிறுமைப்பட்டு ஆவியில் நொருங்குண்டு அவர் வசனத்திற்கு கீழ்படிகிறவனை கர்த்தர் காண்கிறார் - ஏசா. 66:2

*மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, நாம் ஒன்றுமில்லாதவர்கள்:*
பிலி. 2:3 - மற்றவர்களை மேன்மையாக மதிக்க வேண்டும்.

1 தெச. 5:12-13 – உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ண வேண்டும்.

நம் நோக்கம் எல்லாம் தேவன் மீது இருக்கிறது, சொந்த பெலத்தில் அல்ல - 2 கொரி. 4:7

அப்படியென்றால் இது கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தமல்ல.

நம்முடைய நம்பிக்கை நம்முடைய சொந்த திறன்களிலிருந்து வரவில்லை, ஆனால் தேவனுடைய பெலத்தின்மூலம் அதை பெற்றுக்கொள்கிறோம்.

உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ? - யோபு 4: 6

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்- நீதி. 3:26

அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. எபே. 3:12

அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே – எபி. 13:6

நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். 2 கொரி. 3:4

*உங்கள் நம்பிக்கை எங்கேயுள்ளது?*
சொந்த திறன்களிலா? அல்லது தேவனுடைய வல்லமையிலா?

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக