#712 - *ஒரு ஊழியரின் உலக வாழ்க்கை கனியற்றதாக உள்ளது. ( பொய், பண ஆசை
, இச்சை, சுயநலம்) ஆனால் அவர்
ஜெபிக்கும் போது அக்கினி இறங்குகிறது, அற்புதம் நடக்கிறது,
கட்டுகள் உடைகிறது என்கின்றனர். இது எப்படி விளக்கம் தாருங்கள்
சகோதரரே*
*பதில்*
வேதம்
மிக தெளிவாக நமக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது.
பழைய நியமன காலத்தில் இயேசு ஜனங்களையும்
தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி
*அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்;
அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்*; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள்,
சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்றார். (மத். 23:1-3)
ஆனால்
புதிய ஏற்பாட்டிலோ –
நிலைமை இன்னும் நெருக்கப்பட்டுவிட்டது !!
1)
நீயோ *என்
போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும்
அன்பையும் பொறுமையையும்*,
அந்தியோகியா,
இக்கோனியா, லீஸ்திரா
என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய்
அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ
துன்பங்களைச் சகித்தேன்;
இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார். 2தீமோ. 3:10-11
2)
ஆகையால்,
*என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று* உங்களுக்குப்
புத்தி சொல்லுகிறேன்.
1கொரி. 4:16
3)
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் *என்னைப்
பின்பற்றுகிறவர்களாயிருங்கள்*. 1கொரி. 11:1
4)
அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, *அவைகளுக்கு
முன்பாக நடந்துபோகிறான்*, ஆடுகள் அவன்
சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய
சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை
விட்டோடிப்போகும் என்றார்.
யோ. 10:4-5
5)
சகோதரரே,
*நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி*, நாங்கள்
உங்களுக்கு வழிகாட்டுகிறபடி *நடக்கிறவர்களை
மாதிரியாக நோக்குங்கள்*. பிலி. 3:17
6)
நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த
ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை
ஏற்றுக்கொண்டு, *எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி*, 1தெச. 1:6
7)
உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு
இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல்,
*நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு
மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்*. 2தெச. 3:9
8)
தேவவசனத்தை *உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள்
நினைத்து, அவர்களுடைய
நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்*. எபி. 13:7
9)
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, *மந்தைக்கு
மாதிரிகளாகவும்*, கண்காணிப்பு
செய்யுங்கள். 1பேதுரு 5:3
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே
உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய்
நுழையப்பண்ணி, தங்களைக்
கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து,
தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். *அவர்களுடைய
கெட்ட நடக்கைகளை*
அநேகர் பின்பற்றுவார்கள்;
அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசாயுடையவர்களாய், தந்திரமான
வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல்
அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. 2பேதுரு 2:1-3
பழைய சட்டத்தின் கீழ் (நியாயபிரமாணம்), ஒரு தவறான
தீர்க்கதரிசியைக் கண்டறிய இரண்டு சோதனைகள் வழங்கப்பட்டன.
ஒன்று
- “கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன்
இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும்
நிறைவேறாமலும் போனால்,
அது கர்த்தர் சொல்லாத வார்த்தை;
அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ
பயப்படவேண்டாம்”. உபா. 18:21-22
இரண்டாவது - உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும்
எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச்
சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு
அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும்,
அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத்
தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக;
உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும்
உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். உபா. 13:1-3
இப்படி
ஏராளமான வசனங்கள் நம்மை தெளிவுபடுத்துகிறது.
மேடையில்
பேசுபவரின் நடக்கையும் சொந்த வாழ்க்கையும் சரியில்லை என்றால் – உங்களை நீங்கள்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
அக்கினி
இறங்குகிறது என்ற கூற்றை நம்பி ஏமாந்து போக வேண்டாம். எந்த மேடையும் இதுவரை தீ
பற்றி எரிந்ததை நாம் கேட்டதும் இல்லை கண்டதும் இல்லை. இனி வரும் காலங்களில் இதையும் செய்து
காண்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை – (உபா. 13:1-3)
அப்
2ம் அதிகாரத்தில் நடந்த சம்பவம் அக்கினி அல்ல அக்கினியைப் போன்றது (அப். 2:3) !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக