#927 - *இயேசு கிறிஸ்து
முன்னிருந்தவர் என்பதற்கான வேத ஆதாரங்கள் என்னென்ன?*
*பதில்*
இயேசு என்ற பெயர் – மாம்சத்தில் வந்த
தேவனுக்கு கொடுக்கப்பட்ட பெயர்.
கிறிஸ்தோஸ் என்பது கிரேக்க வார்த்தை.
அதில் இருந்து ஆங்கிலத்தில்
ஒலிபெயர்த்து கிறிஸ்து என்றார்கள்.
இரட்சகர் என்பது அதற்கு தமிழ்
அர்த்தம்.
மேசியா என்பது எபிரேயம்.
கிறிஸ்து / மேசியா / இரட்சகர் - அர்த்தம்
ஒன்றே.
ஆகவே இயேசு என்ற பெயரையோ கிறிஸ்து
என்ற பெயரையோ பழைய ஏற்பாட்டில் பார்க்க முடியாது.
கிறிஸ்துவானவர் மாம்சத்தில் பிறப்பதற்கு
முன் அவர் பெயர் “வார்த்தையானவர்”
இவர் தேவத்துவத்தில் ஒருவர்.
*ஆதார வசனங்கள் கீழே*:
1யோ. 4:2 தேவ ஆவியை
நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை
அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
1யோ. 4:3 மாம்சத்தில்
வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே,
அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
2யோ. 1:7 மாம்சத்தில்
வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்;
இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
யோ. 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை
தேவனாயிருந்தது.
யோ. 1:2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
1தீமோ. 3:16 அன்றியும்,
தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே
மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே
நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால்
காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்,
உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே
ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
ரோ. 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே
செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின்
சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
1யோ. 5:7 (பரலோகத்திலே
சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை,
பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும்
ஒன்றாயிருக்கிறார்கள்;
வெளி. 19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட
வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய
வார்த்தை என்பதே.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக