திங்கள், 4 மே, 2020

#926 - வாதைகளான பேன் வண்டுகளை கத்தோலிக்க வேதாகமம் கொசுக்கள் என்றும் ஈக்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

#926 - *வாதைகளான பேன் வண்டுகளை கத்தோலிக்க வேதாகமம் கொசுக்கள் என்றும் ஈக்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது*.

யாத்திராகமம்
8 ல் வாதைகள் பற்றிச் சொல்லப் பட்டுள்ளன.
அவற்றில்  3 மற்றும் 4-ஆம் வாதைகள் பேன் என்றும், வண்டுகள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கத்தோலிக்க வேதாகமத்தில் முறையே கொசுக்கள் என்றும், ஈக்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆழ்ந்து பார்க்கும்போது அதுவே சரி என்று தோன்றுகிறது. Kindly clarify.

*பதில்*
யாத். 8:16-17 அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் *பேன்களாய்ப்போம்* என்று சொல் என்றார். அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் *பேன்களாய்* எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று

தண்ணீரில் இருந்து அல்ல - புழுதியின் மேல் அடிக்க அது பேன்களாகும் என்ற இந்த வார்த்தை மூலபாஷையில் கேன் என்றிருக்கிறது.

எபிரேய வார்த்தை இந்த வாரை தொடர்பாக மட்டுமே சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை பொதுவாக கொசுக்களைக் கொண்டு அடையாளம் காணப்படுகின்றன.

அவை ஏற்படுத்தும் வலி மற்றும் எரிச்சலுக்காக மட்டுமல்லாமல், அவை நாசி மற்றும் காதுகள் வழியாக உடலில் ஊடுருவும் தன்மையுள்ளது என்று கூறப்படுவதால் பொதுவாக கொசுக்கள் என்று அர்த்தங்கொள்ள முடியாது.

பூனை, புலி, சிறுத்தை மூன்றும் ஒரே இனத்தில் அடையாளப்படுத்தப்பட்டாலும் மூன்றும் பல வேறுபாடுகள் உள்ளது போல இந்த பேன்களுக்கும் கொசுக்களுக்கும் வித்தியாசம் உள்ளது.

அது போல ஆரோப் என்ற எபிரேய வார்தைக்கு தமிழில் வண்டுகள் என்று சொல்லப்பட்டாலும் அவைகள் நாய்-மீது வழக்கமாக நாம் பார்க்கும் பொிய இரத்தம் உறிஞ்சும் ஈக்களைப்போன்ற வகையறாக்கள் என்று அறிகிறோம். வழக்கமாக நாம் காணும் ஈக்கள் அல்ல !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக