திங்கள், 4 மே, 2020

#925 - வேதாகமத்தில் (புதிய ஏற்பாட்டில்) வாரிசுதாரர்களுக்கு சொத்து பங்கீடு சம்பந்தமான வசனங்கள் உள்ளதா

#925 - *வேதாகமத்தில் (புதிய ஏற்பாட்டில்) வாரிசுதாரர்களுக்கு சொத்து பங்கீடு சம்பந்தமான வசனங்கள் உள்ளதா?*

*பதில்*
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து கொடுக்க வேண்டும். (2 கொரி. 12:14)

அப்படிப்பட்டவர்களை வேதம் நல்லவர்கள் என்கிறது. நீதி. 13:22, 19:14.

ஆபிரகாம் தன் குமாரனுக்கு உயிரோடு இருந்த காலத்திலேயே தனக்கு உண்டான *யாவையும்* தன் மகனுக்கு கொடுத்தார் – ஆதி. 24:36

தன் மகள்களுக்கு எதையும் கொடுக்காத லாபான் அனைத்து சொத்துக்களையும் வாயிலே போட்டுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டான் – ஆதி. 31:14-15

பிள்ளைகளுக்கு சொத்துக்களை சேர்க்கிறவன் நல்லவன் என்று பிரசங்கியார் சொல்கிறார் – நீதி. 13:22

வீடும் ஆஸ்தியும் – பிள்ளைகளுக்கு கொடுக்கப்படவேண்டும் – நீதி. 19:14

தகப்பன் உயிரோடு இருக்கும் காலத்தில் பிள்ளைகளுக்கு சொத்துக்களை பங்கிட்டு கொடுக்கவேண்டும் என்பது நியாயபிரமாணத்திலேயே தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த கட்டளை – உபா. 21:16

உயிரோடு இருக்கும்போதே பங்கிடுவது மரபும் கட்டளையுமாக இருந்தது - 2நாளா. 21:1-3, ஆதி. 25:6

பிள்ளைகளை சகல போதனையிலும் வித்தைகளிலும் அறிவிலும் வளர்ப்பது பெற்றோரின் கடமை. அதை *உபகாரம் என்று சொல்வதல்ல – அது கடமை*.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக