சனி, 2 மே, 2020

#924 - நெகுஸ்தான் – விளக்கவும்

#924 - *நெகுஸ்தான் – விளக்கவும்*

*பதில்*
மோசே செய்த வெண்கல சர்ப்பத்தை விக்கிரகமாக மாற்றிய இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நெகுஸ்தான் என்று பெயரிட்டார்கள் - 2இரா. 18:4

ஓர் என்ற மலையை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பயணம் செய்தனர். ஏதோம் நாட்டைச் சுற்றிக் கொண்டு அவர்கள் சென்றனர். இதனால் ஜனங்கள் பொறுமை இழந்தனர். 

அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுக்கத் துவங்கினார்கள். அவர்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்கள் இங்கே பாலைவனத்தில் மரித்துக் கொண்டிருக்கிறோம்! உண்ண அப்பம் இல்லை! தண்ணீர் இல்லை! இந்த அற்பமான உணவை நாங்கள் வெறுக்கிறோம்!” என்றனர். 

எனவே, கர்த்தர் விஷமுள்ள பாம்புகளை அனுப்பினார். அவை அவர்களைக் கடித்தன. அநேக இஸ்ரவேல் ஜனங்கள் மரணமடைந்தனர். 

ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் உமக்கும் கர்த்தருக்கும் எதிராகப் பேசும்போதெல்லாம் பாவம் செய்வதாக அறிகிறோம். கர்த்தரிடம் ஜெபம் செய்யும். இப்பாம்புகள் அகலும்படி கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்” என்றனர். மோசே ஜனங்களுக்காக வேண்டினான். 

கர்த்தர் மோசேயிடம், “வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து அதனைக் கம்பத்தின் மேல் வை. பாம்பால் கடிக்கப்பட்ட எவனும் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்தால் மரிக்கமாட்டான்” என்றார். 

எனவே மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணி அதனைக் கம்பத்தில் வைத்தான். பாம்பால் கடிக்கப்பட்டவர்கள் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்து உயிர்பிழைத்தனர்.  எண். 21:4-9

பிற்காலத்தில் உள்ள இஸ்ரவேல் ஜனங்கள் மோசே செய்த அந்த வெண்கல சர்ப்பத்தை விக்கிரகமாக மாற்றி அதற்கு நெகுஸ்தான் என்று பெயரிட்டார்கள் - 2 இரா. 18:4

எப்படிப்பட்ட ஒரு நோக்கத்திற்காக மோசே அந்த காலத்தில் செய்த அந்த வெண்கல சர்ப்பத்தை நாளடைவில் இஸ்ரவேல் ஜனங்கள் தெய்வமாக்கி விக்கிரக வழிபாட்டுக்கான ஒரு பொருளாக்கி விட்டனர்.

சுமார் 750 ஆண்டுகளுக்குப் பின்னர் எசேக்கியா இராஜா அதை அழித்ததார் என்று பார்க்கும் போது, இஸ்ரவேலர் அந்த வெண்கல சர்ப்பத்தைப் பாதுகாத்து, அவர்களுடன் கானானுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை தெளிவாகிறது.

அந்த வெண்கல பாம்பை மோசே செய்தார் என்று ஒரு நினைவுச் சின்னமாகவோ அல்லது சரித்திர சான்றாகவோ வைத்திருக்கலாம் – ஆனால் அதை ஒரு வழிபாட்டு பொருளாக மாற்றி தூபம் காட்டினதில் பாவம் செய்தார்கள்.

எந்த ஒரு முக்கியமான புராதன சின்னமும், பூட்டனார் ஓட்டனார் கால குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும் அது சரித்திர தகவலுக்காக நம் பிற்கால சந்ததிக்கு காண்பிக்க வைக்கலாமேயன்றி – அதை வணங்கும் அளவிற்கு நாம் காரணராகிவிட்டால் அவர்களை விக்கிரக ஆராதனைக்காரர் ஆக்குவதற்கு ஏதுவாகிறது. அவை அகற்றப்படவேண்டும். 2இரா. 18:4

நான் இஸ்ரேல் தேசத்திற்கு போகும் போது யோர்தான் நதி தண்ணீர் ஒரு பாட்டிலில் ஒருவர் கொண்டு வரச் சொன்னார் – மறுத்துவிட்டேன்.

மெனாரா என்று சொல்லப்படும் இஸ்ரவேலர்களின் 7 குத்துவிளக்கை கொண்டு வரச் சொன்னார்கள் (ஹனுக்கா என்பது 9 விளக்குகள் உள்ளது) – அதையும் மறுத்துவிட்டேன்.

அந்த நாட்டிற்கு போன ஞாபகார்த்மாக அது தற்போது இருந்தாலும் – பிற்காலங்களில் அது பூஜை அறைக்கு போவதற்கு நான் காரணமாகி விடக்கூடாது.

தவறான அநேக போதனைகள் ஒரு பக்கம் இருக்க, பிரபல கோயம்புத்தூர் கல்லூரியில் நுழைந்ததும் ஜனங்கள் அந்த தண்ணீர் தொட்டியில் காசு போட வைத்து அந்த தீர்த்தத்தை குடிக்க வைக்கும் நபர்களுக்க என்ன கணக்கு காத்திருக்கும் ??

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக