சனி, 2 மே, 2020

#922 - சாந்து என்றால் என்ன?

#922 - *சாந்து என்றால் என்ன?* இதற்கு அர்த்தம் செல்லுங்கள்

*பதில்*
வழக்கச் சொல் சுவர் கட்டியதும் *பட்டி பூசுவது*

மேடு பள்ளம் தெரியமல் இருக்க அடிப்பார்கள்... பார்க்க அழகாக இருக்கும்...

செய்த தவறு தெரியாமல் இருக்க !!

பட்டி அடித்து விட்டு அதில் உப்பு தாள் போட்டு சுரண்டிய பின்னர் அதன் மேலே சுண்ணாம்பு அல்லது வைட் வாஷ் அல்லது பெயின்ட் அடித்தால் சுவர் வளவளப்பாக இருக்கும். லேவி. 14:42

ஆங்கிலத்தில் Mortar என்பார்கள்.

அதை போல தான் தவறான போதகர்களும் தவறான தீர்க்கதரிசிகளும் செய்கிறார்கள் என்று ஆண்டவர் சொல்கிறார் !!

உண்மை எது என்று அறியாமல் – தங்களுக்கு தெரிந்த வித்தைகளை வார்த்தை ஜாலங்களாக மாற்றி ஆவியானவர் பெயரிலே உரத்த சப்தத்தில் சொன்னதும் – அந்த குரலில் ஆண்டவர் பேசுகிறார் என்று ஜனங்கள் நம்பி தங்கள் குறைபட்டிருந்தும் சீழ் பிதுக்கப்படாமல் அதை அப்படியே மூடி போட்டுவிடுகிறார்கள். வேதத்தை ஒப்பிட்டு பார்க்க ஜனங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தாங்கள் பிரசங்க மேடையில் எதை சொன்னாலும் அது ஆண்டவர் சொன்னதாக நீங்கள் நம்ப வேண்டும் இல்லையென்றால் சபிக்கப்படுவீர்கள் என்று பயமுறுத்தலின் அறிவிப்பும் கூடவே வரும் !!

தமிழ் வேதாகமத்தில் மொத்தம் ஏறத்தாழ 13 இடங்களில் நான் காண முடிகிறது.  அது உபயோகிக்கும் முறை ஒன்று மேலே குறிப்பிட்டாயிற்று ... சிலவற்றை கீழே பதிவிடுகிறேன் :

எசே. 13:10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத *சாந்தை* அதற்குப் பூசுகிறார்கள்.

எசே. 13:11 சாரமில்லாத *சாந்தைப்* பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய்; கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.

எசே. 13:12 இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?

எசே. 13:13 ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல்மழையும், சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசே. 13:14 அப்பொழுது நீங்கள் சாரமில்லாத *சாந்தைப்* பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

எசே. 13:15 இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத *சாந்தைப்* பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசினவர்களுமில்லை.

எசே. 22:28 அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற *சாந்தைப்* பூசுகிறார்கள்.

ஏசா. 44:18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் *அடைக்கப்பட்டிருக்கிறது*.

இந்த “அடைக்கப்பட்டிருக்கிறது” என்ற வார்த்தையும் – சாந்துக்கு சமம் !!

சத்தியத்தை அறிந்திருக்கிறோம் என்று சொல்பவர்களும் சொந்த புரிதலுக்கு அப்பாற்பட்டு தன் சிந்தனைக்கு வெளியே போய் உண்மையை உணராமல் இருக்கும் நிலையை சாந்து போடப்பட்டுள்ளது என்பது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக