சனி, 2 மே, 2020

#921 - ஆனால் ராணுவத்தில் இருக்கும் ஒரு இரட்சிக்கப்பட்ட பிள்ளைக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்றால் அதனால் என்ன பாதிப்பு ஏற்படும்

#921 - *வாரத்தின் முதல் நாள் தோறும் கர்த்தரின் பந்தி அனுசரிக்க வேண்டும் என்பது கட்டளை*.

ஆனால் ராணுவத்தில் இருக்கும் ஒரு இரட்சிக்கப்பட்ட பிள்ளைக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்றால் அதனால் என்ன பாதிப்பு ஏற்படும்

*பதில்*
கப்பல் பிரயாணத்தில் உள்ளவர்கள், இராணுவத்தில் உள்ளவர்கள், வியாதிபட்டு மருத்துவமனையில் உள்ளவர்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போக வாய்ப்புள்ளது.

கர்த்தருடைய பந்தியை கடைப் பிடிக்காமல் இருப்பதற்கு எப்படிப்பட்ட ஒரு காரணமும் நாம் தேடாமல் இருப்பது நல்லது. எந்த சூழ்நிலையில் இருந்தாலும் காலை மதியம் இரவு உணவிற்கான ஆயத்தத்தை எப்படி முன்னமே திட்டமிட்டுக் கொள்கிறாரோ கர்த்தருடைய பந்திக்கும் முன்னேற்பாடு செய்வது அவசியம். அப் 20:5-11

Facebook மூலம் என் நம்பரை அறிந்து ஜெர்மானியர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு – தனக்கு சவுதி அரேபியாவில் நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும் வாரத்தின் முதல் நாளில் கூடும்படி கிறிஸ்தவர்களின் தொடர்பை ஏற்படுத்தி தரும்படியும் கூறினார். முடியாத பட்சத்தில் வாரத்தின் முதல் நாளில் எங்களோடு ஓமான் தேசத்திற்கு வந்து கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதா என்றும் விசாரித்தார். அது சாத்தியமில்லை என்றதும் அந்த வேலையையே அவர் நிராகரித்துவிட்டார்.

சிறைச்சாலையில் பவுல் இருந்த நாட்களின் சூழ்நிலையையும் இந்த நேரத்தில் கருத்தில் கொள்ளுகிறேன் – அப். 24:27, 27:27

கர்த்தருடைய பந்திக்கான தீவிர முக்கியத்துவம் என்னவென்றால், இது ஒரு உள்ளூர் சபையினர் வாரத்தின் ஒவ்வொரு முதல் நாளையும் ஒன்று திரட்ட வேண்டிய இடத்தில் உள்ளது (அப். 20:7; 1 கொரி. 11:17-34).

மேலும் கர்த்தருடைய பந்தியானது ஒரு தேர்வு அல்ல மாறாக அது ஒரு கட்டளை. "என்னை நினைவுகூருங்கள்" (1 கொரி 11:23-25) என்ற கட்டளையை வெளியிடுவதன் மூலம் இயேசு கர்த்தருடைய பந்தியை நிறுவியபோது, ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் நினைவுகூற வேண்டும் என்பதை (அப். 20:7) வெளிப்படுத்தினார்.

இராணுவத்தில் யாரையும் தனி அறையில் படுக்க வைப்பது கிடையாது. தன் ரெஜிமன்ட் முழுவதும் உள்ள நபர்களுடன் தொடர்பில் எப்போதும் இருப்பார்கள். அதில் ஒரு கிறிஸ்தவரும் இல்லை என்பது ஒரு சூழ்நிலை இருந்தால் அப். 17:31ல் நீதியாய் என்ற வார்த்தை எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

இருந்தபோதிலும் விலக்கிவைப்பதற்கான எந்தவிதமான உதாரணமும் இடமும் வாய்ப்பும் இடைவெளியையும் வேதாகமம் இந்த விஷயத்தில் விட்டுவைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக