#920 - *இயேசு தனது இளம் வயதில்
என்ன செய்து கொண்டிருந்தார்?* 12 முதல் 30 வயது வரை
சொல்லுங்கள்
*பதில்*
அந்த இடைப்பட்ட 18வருடங்களை குறித்து
எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.
அவர் தச்சனின் மகன் என்பதை அனைவரும்
அறிந்திருந்தனர். மாற்கு 6:3,
மத். 13:55
லேவி கோத்திரத்தில் பிறக்கவில்லையென்றாலும்
ஒரு பொறுப்புள்ள தாயாக மரியாள் – இயேசுவிற்கு தேவையான அனைத்து ஞானங்களிலும் எழுதப்
படிக்கவும், வேதவசனங்களை தியானிக்கவும், நியாயபிரமாணத்தின்
கட்டளைகளில் தேர்ச்சி பெறவும் வைத்திருக்கவேண்டும். கீழ்கண்ட வசனங்களில் அதை நாம் உணரமுடியும்:
யோ. 21:25 இயேசு செய்த வேறு அநேக
காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று
எண்ணுகிறேன்.
லூக்கா 4:16-17 தாம் வளர்ந்த ஊராகிய
நாசரேத்துக்கு அவர் வந்து,
தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து,
வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம்
அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:...
மத். 7:28-29 இயேசு இந்த
வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது,
அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய்
அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய
போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
லூக்கா 2:52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும்,
தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும்
அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
லூக்கா 2:41 அவருடைய தாய்
தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
லூக்கா 2:47 அவர் பேசக்கேட்ட யாவரும்
அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
லூக்கா 4:22 எல்லாரும் அவருக்கு
நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து
ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
யோ. 7:14-15 பாதிப்பண்டிகையானபோது, இயேசு
தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். அப்பொழுது
யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்
என்று ஆச்சரியப்பட்டார்கள்.
மாற்கு 6:2 ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில்
உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு,
இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன்
கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம்
எப்படிப்பட்டது?
இயேசு கிறிஸ்து அந்த இடைப்பட்ட நாட்களில்
போதுமான அளவிற்கு தன்னை தேவ வார்த்தையில் வளர்த்துக்கொண்டார் என்பதை மேலுள்ள
வசனங்கள் மூலமாக நாம் யூகிக்க முடியும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக