#919 - *திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரைக்கும் இரண்டாக கிழிந்தது. இதில் திரைச்சீலை எதை உணர்த்தி காட்டுகிறது?*
*பதில்*
மத். 27:51, மாற்கு 15:38, லூக்கா 23:45ம் வசனங்களில் தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் மற்றும் இரண்டாகக் கிழிந்தது என்று வாசிக்கிறோம்.
மோசேயின் மூலமாக தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த நியாயபிரமாணத்தின்படியாக ஆசரிப்புக் கூடாரத்தை மோசே கட்டினார்.
அதில் உள்ள அமைப்பின்படியே சாலமோன் தேவாலயத்தை கட்டினார்.
எபி. 9:1-9 வரை விபரமாக காணமுடியும்.
முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். எபி. 9:2
இரண்டாந்திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. எபி. 9:3
அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. எபி. 9:4
ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு *முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்*. எபி. 9:6
*இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒரு தரம்* இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். எபி. 9:7
அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். எபி. 9:8
பரிசுத்த ஸ்தலத்தையும் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் இந்த திரைச்சீலை பிரிக்கிறது (யாத்திராகமம் 26:33).
தேவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான பிளவைக் குறிக்கும் எபிரேய மொழியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது (எபிரெயர் 10: 19-22).
இயேசுவின் மரணம் தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தடையை நீக்கியது. "கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்."(எபிரெயர் 9: 11-12).
தேவாலயத்தின் மாலை ஜெபம் நடத்தப்படும் நேரத்துடன் சிலுவை மரண நேரம் ஒத்துப்போகிறது என்பது சுவாரஸ்யமானது. ஆசாரியர்கள் பலிபீடத்தின் மீது தூபமிட்டுக் கொண்டிருந்த நேரம் இந்த திரைச்சீலை கிழிந்திருக்க வாய்ப்புள்ளது.
கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆசாரியர்கள். 1பேதுரு 2:9
பிரதான ஆசாரியன் என்பது இயேசு கிறிஸ்து ஒருவரே. எபி. 6:20
நியாயபிரமாணம் நிறைவுற்றதால் (ரோ 10:4) அந்த முறைபடி எந்த மனிதனும் பிரதான ஆசாரியராக நியமிக்கப்படுவதில்லை. நமக்காக யாரும் தேவனிடத்தில் பரிந்து பேசாமல், நாம் அனைவரும் பிதாவினிடத்தில் நேரடியாக செல்லும் வாய்ப்பை பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து புறஜாதியாராகிய நமக்கும் வாங்கி கொடுத்திருக்கிறார். எபி 4:16
நியாயபிரமாணம் முடிவிற்கு வராதிருந்தால் புறஜாதியாராகிய நாம் இப்படிபட்ட சிலாக்கியத்தை பெற்றிருக்க மாட்டோம். எபே. 2:14-18
திரைச்சீலை கிழிந்ததன் நோக்கம் அந்த முறைமை இனி இல்லை என்பதை தெளிவுபடுத்தியது... அது *மேலிருந்து கீழாக* கிழிந்தது என்பதை கவனிக்கவும் !! அல்லேலூயா !!!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக