*பதில்*
தேவாலயம்
என்பது – எருசலேம் தேவாலயத்தை குறிக்கிறது.
இந்த
கட்டிடம் முழுவதும் 70 கி.பியில் ஒரு செங்கல் ஒன்றின் மீது இல்லாதபடிக்கு இயேசு கிறிஸ்து
சொன்னது போல இடிக்கப்பட்டுப் போனது. இஸ்ரவேலர்கள் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயபிரமாணத்தின்
படி இங்கு தொழுதார்கள்.
ஆனால்
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இந்த இடம் எந்த முக்கியத்துவத்தையும் அளிக்காது. தேவனை
எங்கும் தொழுது கொள்ளும் காலத்தில் இருக்க கிருபை பெற்றோம். – யோ. 4:21.
சாலமன்
1000 கி.முவில் கட்டியதாகக் கூறப்படும் எருசலேம் தேவாலயம் 587/586 கி.பி.யில்
அழிக்கப்பட்டது. பாபிலோனியர்கள் நகரைக் கைப்பற்றி, எரித்தனர். யூதேயத் தலைமையை
பாபிலோனுக்கு நாடுகடத்தினர். 2இரா. 25:8-9.
இந்த
நிகழ்வு இஸ்ரேலிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. ஏனெனில் இது ஒரு
தன்னாட்சி அல்லது அரைகுறையான யூத அரசாங்கத்தின் முடிவை பிரகடணப்படுத்தியது.
539
கி.முவில் பெர்சியாவின் இராஜா கோரேஸ் பாபிலோனிய சாம்ராஜ்யத்தை கைப்பற்றி, அந்த சாம்ராஜ்யத்தை
தனது சொந்த ஆட்சியின் கீழ் கைப்பற்றி, யூதர்களை தங்கள்
நாட்டிற்கு திரும்ப அனுமதித்தபோது, இந்த தேவாலயத்தை மீண்டும்
கட்டினார்கள். எஸ்றா 1.
ஆகாய்
மற்றும் சகரியாவின் தீர்க்கதரிசன புத்தகங்கள் இந்த யூத தலைவர்களையும் மக்களையும்
ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப வலியுறுத்துவதை காணமுடியும். எஸ்றா 1-6 அவ்வாறு
செய்வதற்கான அவர்களின் வெற்றிகரமான முயற்சிகளை சித்தரிக்கிறது. சுமார்
516/515
கி.முவில் கட்டி முடித்தாக வரலாறு கூறுகிறது.
மீண்டும்
கட்டப்பட்ட தேவாலயம் மீண்டும் ஒரு புதிய சகாப்தத்தைக் குறித்தது. நாடு கடத்தப்பட்டிருந்த
யூதர்களின் வாழ்க்கையை புதுப்பிப்பதை இது குறிக்கிறது.
முதல்
முறை சாலமோனால் கட்டப்பட்ட தேவாலயமானது இராஜாவின் கட்டளைப்படி கட்டாய உழைப்பால்
கட்டப்பட்டது. இரண்டாவது கட்டப்பட்டதோ மக்களின் பொது கடமையான வேலையாக இருந்தது.
இது பாரசீக அரசின் அனுசரணையின் கீழ் நடைமுறைக்கு வந்த போதிலும் (எஸ்றா 1:1-4), உண்மையான
கட்டமைப்பாளர்கள் யூதர்களாக இருந்தனர் (எஸ்றா 1:5-6,14).
மேலும்
அவர்கள் ஒருதலைப்பட்சமாக அதைப் பராமரிப்பதாக சபதம் செய்தனர் (நெகே. 10:32-39).
ஒரு
முடியாட்சி இல்லாத நிலையில்,
சாலொமோனின் ஆலயத்தை விட இரண்டாவது கோயில் யூத வாழ்க்கையில் ஒரு
பெரிய இடத்தைப் பிடித்தது.
இரண்டாவதாக
கட்டப்பட்ட தேவாலயமானது - பாரசீக காலம் (கிமு 586-332); ஹெலனியக் காலம்
(கிமு 332-63); மற்றும் ரோமானிய காலம் (கிமு 63-கி.பி 324) என்று
வெவ்வேறு காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
37
கி.மு.வில், ஏரோது மன்னன் தேவாலயத்தின் எல்கைகளை விரிவுபடுத்தி, பொதுமக்களின்
ஒப்புதலுடன் தேவாலயத்தை மீண்டும் கட்டினார்.
இரண்டாவதாக
கட்டப்பட்ட தேவாலயம், டைட்டஸின் இராணுவத்தால் கி.பி 70ல் ரோமானிய காலத்தில் அழிக்கப்பட்டது. நகரத்தின்
அழிவுக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிலுவையில் அறையப்பட்டார்.
தற்போது
எருசலேமில் மேற்கு சுற்றுச்சுவர் மாத்திரம் எஞ்சியுள்ளது. அந்த இடத்தில் யூதர்கள்
தினமும் தங்கள் ஜெபங்களை மோசேயின் நியாயபிரமாணத்தை நினைத்து இனியும் ஒரு மேசிய வருவார்
என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். மேசியா வந்தாயிற்று என்பதை அவர்கள் இன்னமும்
ஏற்றுக்கொள்ளவில்லை !! அதனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து நகரத்தை பார்த்து கண்ணீர்விட்டது
நினைவிருக்கும் – லூக்கா 19:41-42
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஆதாரங்கள்
:
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக