*ஊழியம் என்றால் என்ன?*
வழக்க சொல் - வேலை
ஊழியக்காரன் என்றால் - வேலைக்காரன்.
யாருக்கு வேலைக்காரன் என்பது தான் பொருள்
*வேதாகம பயிலகம் என்றால் என்ன? *-
ஊழியர்களை பயிற்றுவிக்கும் இடம்.
*இதில் படித்தால் தான் ஊழியம் செய்ய முடியுமா?* -
கட்டாயம் கிடையாது. முறையாக ஊழியம் செய்ய வேதத்தை தெளிவாகவும் சரியாகவும் அறிந்து கொள்வது அவசியம். இல்லையென்றால் சாபம் தேடி வரும். யாக் 3:1
*வேதகம பயிலகம் யாரால் எதற்காக உண்டாக்கப்பட்டது?* -
ஆதி காலங்களில் வெளிநாட்டவர்களால் தமிழர்களுக்கு வேத பயிற்சியளிக்கும்படி ஆரம்பிக்கப்பட்டது.
*இது ஆதி கிறிஸ்துன் சபையில் உள்ளதா?* -
அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவினிடம் கற்றனர். சீஷர்கள் அப்போஸ்தலரிடத்தில் கற்றனர். இப்படி கற்று அறிய வேண்டியது அவசியம். அந்த காலங்களில் படிப்பறை என்ற முறை இல்லை.
*இதில் படித்தால் தான் வேதகமத்தை சரியாக படிக்க, போதிக்க முடியுமா?* - நிச்சயமாக இல்லை. இக்காலங்களில் - கிறிஸ்துவின் சபை பைபிள் காலேஜ்லயிருந்து வெளியே வருபவர்கள் 100ல் ஒருவர் சரியானவர் என்று சொல்வதே பொிய கேள்விகுறி என்பதை நான் ஆணித்தரமாக சொல்லமுடியும்.
*ஊழியம் செய்பவரின் கடமைகள், பெறுப்புகள், வேலைகள், உரிமைகள், யாவை?*
சந்தேகத்திற்கு இடமில்லாமல் - குடும்பம் முதல் பணி, இரண்டாவது ஊழியம். அவ்வளவு சுருக்கமாக சொல்லிவிடமுடியாது.
*ஊழியம் செய்வதற்கு தனியாக யாரது உண்டா? அல்லது இவர்கள்தான் ஊழியம் செய்ய வேண்டுமா?*
ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் ஆசாரியர்கள். அனைவரும் ஊழியத்திற்கென்று அழைக்கப்பட்டவர்கள். யாரையும் தேவன் தனியாக ஊழியத்திற்கென்று அழைப்பதில்லை !!
*ஊழியம் செய்பவர் வேலை செய்ய வேண்டுமா? அல்லது சபை உதவி செய்ய வேண்டுமா? அல்லது ஊழியர் குடும்பத்தையே தாங்க வேண்டுமா?*
கண்டிப்பாக வேலை செய்து தான் தன் குடும்பத்தை நடத்த வேண்டும். ஊழியரின் நேரம், சபை மக்களை விசாரிப்பதற்கே வாரம் முழுதும் நாள் முழுதும் அவசியப்படும் பட்சத்தில் அந்த சபை அவ்வளவு அதிகமாக வளர்ந்திருக்கிறது என்று பொருள். அப்படியிருக்கும் பட்சத்தில் அந்த சபை தங்கள் ஊழியரை தாங்க வேண்டும். அவருக்கு சபை கொடுக்கும் உதவி தொகையானது அவரது குடும்பத்தை நடத்த போதுமானதாக இருப்பது அவசியமே.
*ஊழியர்க்கு மகன் அல்லது மகள் முலமாக உதவி கிடைக்கும் போதும் சபை ஊழியரை தாங்க வேண்டுமா?* ஊழியரை தாங்குவது சபையின் கடமை. அவருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பது சபையாருடைய கவலையாக இருந்தால் - உதாரத்துவம் கேள்விகுறியாகிவிடும். அதே நேரத்தில் ஊழியரும் தன் செலவுக்கு அதிகமாக பணம் வரும் பட்சத்தில் சபை காணிக்கையை மற்ற அநேக நற்காரியங்களுக்கும் சபை வளர்ச்சிக்கும் சயையில் உள்ள ஏழை விதவை, ஏழை பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்.
*ஊழியர்க்கு உதவி (சம்பளம்) யார் முடிவு செய்ய வேண்டும்?* இந்த கேள்வியை கேட்கும் அளவிற்கு அந்த சபை வளர்ந்திருக்கிறதாகையால் நிச்சயம் அந்த சபையில் மூப்பர்கள் இருக்க வேண்டும். அதை மூப்பர்கள் தீர்மானிக்க வேண்டும்.
*ஊழியர்க்கு சபையின் உதவி(பணம்) எனக்கு
போதுமானதாக இல்லை என்று ஊழியர் செல்லலாமா?* அவருக்கு அந்த உரிமை இல்லை என்று சொல்வதற்கில்லை. அவர் மனப்பூர்வமாக சபையில் ஊழியம் செய்வது ஆத்துமாக்களுக்கு ஆதாயமாயிற்றே. வருத்தத்தோடே அவர் ஊழியம் செய்வது சரியல்ல.
*ஒரு ஊழியர் ஆதாயத்துக்கு சபையை நடத்துகிறார் அல்லது உண்மையாக சபையை நடத்துகிறர் என்று எப்படி அறிய முடியும்?*
அவருடைய நடவடிக்கைகள் காட்டி கொடுத்து விடும். கனிகளினால் அறிவீர்கள். சபை வளர்ந்த போதும் அதன் அதிகாரத்தை தன் கையில் வைத்திருப்பவர் தவறானவர். மூப்பர்களை நியமித்து சபை அதிகாரம் மூப்பர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அனைத்தையும் தன் கையிலேயே வைத்திருக்கிறார் என்றால் - அவர் சுயநலவாதி.
*சபையாரின் கடைமைகள் யாவை?*
விசுவாசத்தில் நிலைத்திருக்கவேண்டும். சத்தியத்தை விட்டு விலகாமல் தங்களை காத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அன்பாகவும் மற்றவர்களை தங்களை விட மேன்மையாகவும் வைத்து சீராக நடந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக