ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

#853 - இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு - விளக்கவும்

#853 - *இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும்,பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத்தானாய்க் கொடுக்கும்*. மாற்கு 4:27-28 - Please explain

*பதில்*
5 தலைப்புகளின் கீழ் தேவனுடைய இராஜ்ஜியத்தின் வளர்ச்சியின் தன்மையை குறித்து இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்து.

மாற்கு 4:
1-9  விதைக்கிறவனின் உவமை
10-20 உவமைகளின் நோக்கம்
21-25 விளக்குதண்டை குறித்த பாடம்
26-29 நிலத்தில் விதைப்பதன் அடையாளம் – பரலோக இராஜ்ஜியத்தின் ஒப்புமை
30-34 கடுகு விதையின் உவமை
35-41 கர்த்தருக்கு கடல் (இயற்கை) மீதும் உள்ள வல்லமையின் நிரூபனம்.

நீங்கள் கேட்ட பகுதி 26-29ம் வசனங்கள்.
தேவனுடைய வார்த்தையானது நிலத்தில் விழுந்த / விதைத்த விதைக்கு ஒப்பாக இருக்கிறது.

விதைப்பது மாத்திரமே ஒருவனுடைய வேலையாக இருக்கிறது.

அதற்கு மேலே ஒருவரும் எதையும் செய்து விடமுடியாது !!
விதையை கீறி,
அதனுள் இருக்கும் பருப்பை வெளியே இழுத்து
தளைக்க செய்ய முடியாது !!
விதையினுள் இருக்கும் பருப்பிலிருந்து இலைகளையும் தண்டுகளையும் உருவாக்க முடியாது !!

விதைக்கிறான் – காலையில் தளைத்து முளைத்தெழும்பி பூமிக்கு மேலே வருகிறது – மாற்கு 4:27

அது போல – தேவ வார்த்தையை பிரசங்கிக்கறவர்கள் இருக்கிறார்கள்.

பிரசங்கிப்பது மாத்திரமே அவர்கள் செய்ய முடியும் - 1கொரி 9:16
தேவ வார்த்தையை தைரியமாக முழங்க வேண்டும் - எரே 1:17

விதை நல்ல நிலத்தில் விழுந்தாலும் கெட்ட நிலத்தில் விழுந்தாலும் அது முளைத்து விடும். லூக்கா 8:6-8

வளரவிடுவது அந்த நிலத்தின் தன்மையை பொருத்து !!

விழுந்த விதை கற்பாறை என்றாலோ,
முற்செடியினால் நெருக்கப்பட்டாலோ – தேவ ஊழியக்காரன் அந்த நிலம் பண்படுத்தப்படும்படி உணர்த்தலாம், நிலத்தை சீர்படுத்த முயற்சிக்கலாம் !!

ஒருவராக கிறிஸ்து துவங்கி
12 பேர் அதை முன்னெடுத்து
120 பேர் கடந்து சென்று
3000 பேர் சபை துவங்கப்பட்ட முதல் நாளில் சேர்ந்து (அப் 2:41)
5000 பேராக வளர்ந்து (அப் 4:4)
எண்ணிலடங்கா எண்ணிக்கையில் வளர்ந்ததை (அப் 5:14)
முதல் நூற்றாண்டிலேயே நாம் பார்க்கிறோம்.

இன்று வரை தேவ வார்த்தையின் வளர்ச்சியை எந்த நீரோவாலும் ஹிட்லராலும் அடக்கமுடியவில்லை. இனியும் நடக்காது !!

விதைத்த இரவிலேயே வசனம் வேலை செய்யும் – ஏசா 55:11, மாற்கு 4:28

விதைக்கிறவன் சரியான விதையை விதைத்தால் – அவனும் பலனடைவான் !! 1கொரி 3:12-13

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக