வெள்ளி, 24 ஏப்ரல், 2020

#900 - கவலையில்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது?

#900 - *கவலையில்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது?*

*பதில்*
கவலையில்லாத வாழ்க்கை என்பதை விட மகிழ்ச்சியான வாழ்க்கையை குறித்து சில காரியங்களை பார்க்கலாம்.

கவலையில்லாத இடத்தை தேடுவதைக் காட்டிலும் மகிழ்ச்சியுள்ள இடத்தை தேடுவது சிறந்தது.

கவலைவந்து விடக்கூடாது என்ற எண்ணம் – மகிழ்ச்சியை அடையாளப்படுத்தாது.

ஆகவே
கஷ்டங்களை அல்ல, உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள். இந்த வாழ்க்கையில் நமக்கு பிரச்சினைகள் இருந்தாலும், நாம் இன்னும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

வாழும் அந்த நாளை குறித்து யோசிப்பது தான் சரியானதாக இருக்கும். நாளைய தினம் நான் எப்படி வாழ்வேன் என்று யோசித்தால் – இன்றைய தினத்தில் உள்ள சந்தோஷத்தை இழக்கிறீர்கள் - யாக். 4:14.

கூடவே இருப்பவர்களை கவனிக்காமல் – தூரத்தில் இருப்பவர்களிடமே அதிக நேரத்தை செலவிடும்படியான இந்த நாட்களின் *தொலை* தொடர்புகள் அநேக குடும்ப சந்தோஷத்தை தொலைத்துப் போட்டது.

அருகிலுள்ளவர்களை மறந்து தொலைவில் உள்ளவர்களோடு தொடர்பு படுத்தியதன் விளைவு – சீரழிவு !!

உபயோகப்படுத்தும் நேரத்தை கட்டுக்குள் வைக்கத் தெரியாமல் சுய கட்டுபாட்டை இழந்து எப்போதம் அதிலேயே மூழ்கி தொலைதொடர்பு கருவிகளை கழிவறைக்கும் எடுத்துக்கொண்டே போகக்கூடிய அளவிற்கு மோசமாகிப்போனது !!

நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அதே அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் - லூக்கா 6:38

நீங்கள் மற்றவர்களுடன் சந்தோஷமாக பழக கற்றுக்கொள்ளும்போது – அது திரும்பகிடைக்கும் !!

தவறையே எப்போதும் சுட்டிக் காட்டிக்கொண்டிராமல் – நல்லவைகளை பாராட்ட பழக வேண்டும். யோபு 40:8

எப்போதும் ஜெபம் செய்யுங்கள். ஆசீர்வாதங்களுக்கானவைகளை தேவனிடம் கேளுங்கள். அவரிடம் வழிகாட்டுதலைக் கேளுங்கள். லூக். 18:1, மத். 7:7, யாக். 1:5

ஒவ்வொரு நாளும் நல்ல செயலையேச் செய்யுங்கள். கர்த்தருடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள் - அப். 10:38.

முன்னுரிமைகளைப் சோதித்தறியுங்கள். முக்கியமான விஷயங்களை முதலிடத்தில் வைத்திருங்கள் – மத். 6:33.

உங்கள் வாழ்க்கையிலிருந்து வேண்டாத “குப்பைகளை” அடையாளப்படுத்தி எந்த திட்டத்தையும் வகுக்காமல் தூக்கி எறியுங்கள் - பிலி. 4:8.

மகிழ்ச்சியின் பழக்கத்தை மாத்திரமே கடைபிடிக்க கற்றுக்கொள்ளுங்கள். பிலி. 4:4

இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். கொலோ. 3:8

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். எபே. 4:29

வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். எபே. 5:4

வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. யாக். 3:16

அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. கொலோ. 4:6

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 1பேதுரு 3:15

உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கட்டும் -1யோ. 1:4

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக