வெள்ளி, 24 ஏப்ரல், 2020

#902 - யோவேல் 2ம்அதி 1-11 வரையில் உள்ள 1-ஏராளமான பலத்த ஒரு ஜாதி, இவைகள் எது? 2-சீயோன் என்பது எருசலேம் நகரையா குறிக்கிறது? 3-பரிசுத்த பர்வதம் என்பது எதை குறிக்கிறது? 4-3ம் வசனம் எதை சொல்கிறது?

#902 - *யோவேல் 2ம்அதி 1-11 வரையில் உள்ள ஏராளமான பலத்த ஒரு ஜாதி, இவைகள் எது? சீயோன் என்பது எருசலேம் நகரையா குறிக்கிறது? பரிசுத்த பர்வதம் என்பது எதை குறிக்கிறது? 3ம் வசனம் எதை சொல்கிறது?*

பதில்
1-ஏராளமான பலத்த ஜாதி என்பது – வெட்டுக்கிளிகளைக் குறிக்கிறது – யோவேல் 1:6, யோவேல் 2:25

2- எருசலேமின் மேற்கு பகுதி மலைகள் சீயோன் மலை என்றும் கிழக்கு பகுதி மலை மோரியா என்றும் அழைக்கப்பட்டாலும் மொத்த எருசலேம் நகரத்தையும் சீயோன் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. யோவேல் 3:17, சகரி 8:3, எபி 12:22-24

3- இந்த வசனத்தின் அடிப்படையில் – இது சீயோன் பர்வதத்தை குறிக்கிறது. எபி 12:22

4- 3ம் வசனம் – இந்த அழிவிற்கு முன்னதாக அந்த இடம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அழிவிற்கு பின்னால் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. யோவேல் 1:4-7

இந்த பகுதிக்கான விரிவான விளக்கத்தை #810ல் காணலாம். அதனுடைய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக