வெள்ளி, 24 ஏப்ரல், 2020

#898 - ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே. நீதி. 3:30 விளக்கவும்

#898 - *ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே*. நீதி 3:30 - விளக்கவும்

*பதில்*
எந்த அடித்தளமும் இல்லாதபோது, ஒரு புகாரை உருவாக்கி நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமலேயே வார்த்தைகளால் வம்புக்கு இழுத்து சர்ச்சைக்குரிய வகையில் சிக்கவைத்து சண்டையிட தூண்டி தீய செயல்களால், வழக்குகளால், யாதொருவரையும் அகப்படுத்தாதேயுங்கள் என்கிறார் பிரசங்கி.

கிறிஸ்துவின் போதனையோ – ஒருவர் நம் கண்ணத்தில் அறைந்தாலும் அமைதியாக இருந்து மீதம் இருக்கும் மறு கண்ணத்தையும் காண்பித்து அவன் கோபம் தீர்த்துக்கொள்ள விட்டு விடு என்கிறார் – மத். 5:39

நீதிமானுக்கு ஒருவன் தீங்கு செய்தால் – அவனை தேவனே தண்டிக்கும்படி மௌனமாக விட்டுவிடவேண்டும்.  நாம் முந்திக்கொண்டு நம் சக்திக்கு உட்பட்டு எதையாவது திரும்ப செய்து விட்டால்  துன்புறுத்தினவன் தேவ ஆக்கினைக்கும் தப்பித்துக்கொள்வான் !! ரோ. 12:19

கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன். நீதி. 29:22

கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். 2தீமோ. 2:24

மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும். நீதி. 18:6

ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான். நீதி. 14:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக