#896 - *அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். மத்தேயு 8:22* விளக்கவும்
*பதில்*
இயற்கை மரணம் என்பது உடலையும் ஆன்மாவையும் பிரிப்பது.
ஆன்மீக மரணம், கடவுளையும் ஆன்மாவையும் பிரித்தல்.
பாவத்தில் வாழும் மனிதர்கள் பாவத்தில் இறந்து விட்டவர்கள்.
ஆன்மீகத்தில் இறந்தவர்கள் சரீரத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய விடுங்கள் என்ற ரீதியில் இங்கு சொல்கிறார்.
மேலும் நியாயபிரணமானத்தின்படி நசரேய விரதம் உள்ளவர்கள் தன் தகப்பனுடைய சாவாயினும் பிரேதத்தண்டை போக அனுமதியில்லை – எண். 6:7, லேவி. 21:11
உண்மையாகவே தகப்பன் மரித்திருந்தால் – இந்த சீஷன் இங்கு நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டான்.
ராஜ்ஜியத்திற்குரிய வேலையை தலை சாய்க்க கூட நேரமில்லாமல் அனைத்து வாய்ப்புகளையும் கிறிஸ்துவானவர் பயன்படுத்தும் அவசியத்தை இங்கு உணரவேண்டும் – மத். 8:20
பரலோக இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது என்று எங்கும் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார் – போகும் போதே அதை வலியுறுத்துங்கள் என்றார் – மத். 10:7
இந்த சீஷனோ தனக்கு போக மனதுண்டு – ஆனாலும் என் வீட்டில் வயதான தகப்பனார் சீக்கிரம் மரணிக்க வாய்ப்புண்டு என்று கருதி அதற்கான தன் கடமையை முடித்துவிட்டு ஊழியத்திற்கு வரட்டும் என்ற ரீதியில் சொன்னபோது தான் இயேசு கிறிஸ்து சொன்னார் – மரித்தோர் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் என்று !!
ஆகவே தான் இயேசு சொன்னார் :
கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். லூக்கா 9:62
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக