வெள்ளி, 24 ஏப்ரல், 2020

#897 - முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. மத்தேயு 5:24

#897 - *ஒப்புரவாகிய பின் தான் காணிக்கை செலுத்த வேண்டுமா?* அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. மத்தேயு 5:24

சகோதரன் என்பவன் உடன் பிறந்தவரை குறிப்பிடப்படுகிறதா Or உலக மக்களை குறிப்பிடுகிறதா?

*பதில்*
தான் தன் சகோதரனுக்கு விரோதமாக செய்த ஒரு காரியத்தில் அவனிடம் அந்த தவறை சரி செய்வதற்கு முன்பே தேவனிடத்தில் வந்து சமாதான பலியையோ பாவநிவாரண பலியையோ செலுத்திவிட்டால் தன் பங்கு தீர்ந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த நியாயபிரமாண காலம் அது !!

23ம் வசனம் அதை தெளிவு படுத்துகிறது. “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்…”

இவன் ஏதோ தவறு செய்திருக்கிறான் – ஆகவே தான் உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை இருக்கும் பட்சத்தில் என்று பார்க்கிறோம்.

ஆசாரியனுக்கு முன்னதாக (ஊருக்கு முன்னதாக) நீதிமான் ஆகிவிட்டு சொந்த பகையை / அல்லது செய்த தவரான காரியத்திற்கு மனஸ்தாப படாமல் இங்கு வந்து பலி கொடுத்து விட்டால் சரியாகிவிடுமோ என்றார்? மத். 23:23

நாம் மற்றவர்களுக்கு மன்னிக்கவில்லையென்றால் – நம் குற்றமும் பரலோகத்தில் மன்னிக்கப்படாது - மாற்கு 11:25-26

கிறிஸ்தவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது:
யாதாமொருவன் பலிபீடத்திற்கு வரும்போது – அதாவது தேவனுடைய சமூகத்திற்கு வரும்போது தன் பேரில் மற்றவனுக்கு குறையுண்டானால் – அவனிடம் முதலாவது ஒப்புரவாக வேண்டும்.

அல்லது மற்றவன் நமக்கு விரோதமாய் குற்றம் செய்திருந்தாலும் நம் இருதயத்தில் அவன் மீது அல்லது யார் மீதும் கசப்பை வைத்துக்கொண்டு தேவனிடத்தில் ஜெபிக்க வர இயலாது – மத். 18:15

(இரட்சிக்கப்பட்டவர்கள்) நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக். 5:16

சகோதரன் என்பது – இனத்தானோ, சொந்த ஜனமாகவும் இருக்கலாம். இஸ்ரவேலர் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாயிருக்கிறார்கள் – லேவி. 19:17, லேவி. 25:46, உபா. 17:15

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக