வெள்ளி, 24 ஏப்ரல், 2020

#895 - மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், யோவான் 5:25

#895 - *மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்*, அது இப்பொழுதே வந்திருக்கிறது: அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.யோவான் 5:25

இந்த வசனங்களை விளக்கவும்

*பதில்*
19ம் வசனத்திலிருந்து 29ம் வசனம் முடிய ஒரு தலைப்பின் கீழ் வயைறுக்க முடியும்.

அவ்வாறு காணும்போது இந்த 25ம் வசனத்தில் வரும் மரித்தோர் என்பது - சரீர மரணம், ஆவிக்குரிய மரணம், மற்றும் நித்திய மரணம் என்று மூன்று வகையான மரணத்தை குறித்து மரித்தோர் என்ற அர்த்தத்தைக் காணமுடியும்.

சரீர மரணம் - உடல் மற்றும் ஆன்மாவைப் பிரிப்பது.

ஆவிக்குரிய மரணம் – தேவனையும் ஆன்மாவையும் பிரிப்பது.

நித்திய மரணம் – சரீரத்தையும் ஆன்மாவையும் தேவனிடமிருந்தும் பரலோகத்திலிருந்தும் பிரிப்பது.

இந்த மூன்று வகையான மரணங்களுக்கு விடையளிக்கும் வகையில்,  ஒன்றோடொன்று இணைந்திருக்கிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு நம்முடைய கர்த்தர் சொல்லுகிறதாவது - நேரம் வந்துவிட்டது, இப்போது அவர்கள் தேவனுடைய குமாரனுடைய சத்தத்தைக் கேட்டு ஜீவிப்பார்கள்.

பிரேதக்குழிகளில் உள்ள அனைவருமே மனுஷகுமாரனின் குரலில் விழித்தெழுந்து நியாயத்தீர்ப்புக்கு வரும் நேரம் வரும் வருகிறது – யோ. 5:21, 5:28, 5:29.

மீறல்களிலும் பாவங்களிலும் இறந்துபோன பலர், தேவனுடைய குமாரனின் குரலை (வார்த்தையை) கேட்டு, விசுவாசித்து மனந்திரும்பி விசுவாசத்தை அறிக்கையிட்டு  ஞானஸ்நானத்தில் கீழ்படியும் போது  அவர் மூலமாக ஆத்தும வாழ்க்கையைப் பெறுகிறார்கள். மாற்கு 16:16, அப். 22:16, ரோ. 6:3-6

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக