#881 - *நீங்கள் மனுஷனுடைய கட்டளைகள் யாவற்றிக்கும் கர்த்தர் நிமித்தம்
கீழ்படியுங்கள் - நல்லதும், கெட்டதுமான
கட்டளை யாவற்றிக்குமா*?
*பதில்*
இந்த
வசனம் பேதுருவின் முதல் நிருபம் 2:13ல் பார்க்கமுடிகிறது.
அதிகாரத்தில்
நியமிக்கப்பட்ட எந்த மனிதனும் ஒழுக்கத்தை நிலைநாட்டும்படி நியமிக்கப்பட்டவர்கள்.
சிலர் அரசாங்க அதிகாரிகளாக இருக்கலாம் சிலர் தனியார் நிர்வாக அதிகாரியாக
இருக்கலாம். அனைவரும் நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்கள்.
எல்லா
இடங்களிலும் உள்ள வரம்பு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
தேவனுடைய
சட்டத்திற்கு எதிராக கட்டளைகள் அதிகாரிகளிடத்திலிருந்து வந்த போது அப்போஸ்தலர்கள்
நமக்கு நல்ல முன்மாதிரியை வைத்திருக்கிறார்கள். “அப் 4:19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக: தேவனுக்குச்
செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ
என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்”.
சிவில்
அதிகாரத்திற்கு அடிபணியுமாறு கட்டளையிடப்பட்ட பொது கடமையில் – ரோ. 13:1-7ல் நமக்கு
சரியான ஆலோசனையுள்ளது.
எந்த
மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற
அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
ஆதலால்
அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து
நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
மேலும்
அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல,
துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
உனக்கு
நன்மை உண்டாகும்பொருட்டு,
அவன் தேவவூழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு;
பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன்
நீதியைச் செலுத்துகிற தேவவூழியக்காரனாயிருக்கிறானே.
ஆகையால், நீங்கள்
கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும்
கீழ்ப்படியவேண்டும்.
இதற்காகவே
நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற
தேவவூழியக்காரராயிருக்கிறார்களே.
ஆகையால்
யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச்
செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச்
செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப்
பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக்
கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். ரோ. 13:1-7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக