#880 - *கிறிஸ்தவர்கள் மருந்து சாப்பிடலாமா?*
*பதில்*
கர்த்தர்
ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக சொன்னதை கவனியுங்கள்:
உள்ளங்கால்
தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை;
அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும்,
கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும்
இருக்கிறது. ஏசா. 1:6
தேவனுடைய
கட்டளையின்படி
ஏசாயா
தீர்க்கதரிசி
எசேக்கியா
இராஜாவினிடத்தில் –
நீ
சாகமாட்டாய் என்று சொன்னதுமல்லாமல்
அதற்கு
சாட்சியாக சூரியக்கடிகாரத்தில் 10 பாகை பின்னிட்டு போக வைத்து தேவனால் *ஊர்ஜீதப்படுத்தியபின்பும்*
– தேவ மனுஷனான ஏசாயா – எசேக்கியாவின் காயம் ஆறும்படியாக மருந்து கட்ட சொன்னார் - ஏசா. 38:21, 38:5-8
மருத்துவம்
எடுத்துக்கொள்வது கடவுள் மீதான அவநம்பிக்கை என்றும் அது பாவம் என்றும் கடந்த சில
வருடங்களாக சிலர் கூறிவருகின்றனர்.
ஜெபத்தினால்
குணப்படுத்தப்படும் அற்புதங்கள் எல்லா விசுவாசிகளுக்கும் காலம் முழுவதும்
கிடைக்கின்றன என்பதை புதிய ஏற்பாடு கற்பிக்கவில்லை.
கிறிஸ்துவின்
அற்புதங்கள் மற்றும் அவற்றின் நோக்கம் என்ன என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.
(யோ. 2:11,23; 3:2; 5:36; 6:26-27; 10:24-25,37-38; 20:30-31) இன்னும்
ஏராள வசனங்களை கோடிட்டு காண்பிக்கமுடியும்.
குணப்படுத்தும்
அற்புதங்களின் நோக்கம் விசுவாசிகளின் உடல் ரீதியான துன்பத்தைத் தணிப்பதும், போதுமான நம்பிக்கை
கொண்ட எந்தவொரு விசுவாசிக்குக் கிடைப்பதுமே என்றால், பின்வருவனவற்றைப்
பற்றி நாம் படிக்க மாட்டோம்.
பவுலுக்கு
ஒருவித பலவீனம் இருந்தது,
அது அவருக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியது; அது அகற்றப்பட வேண்டும் என்று மூன்று முறை அவர் ஆவலுடன் ஜெபித்தார்,
ஆனால் அது நிறைவேறவில்லை! (2 கொரி. 12:7-9)
துரோப்பீமுவை
குணப்படுத்தாமல் பவுல் வியாதியாகவே விட்டுவந்தார் – 2தீமோ. 4:20.
எப்பாப்பிராதீத்து
மரணத்தின் எல்லைவரைக்கும் கடுமையான நோய்வாய்ப்பட்டார் – அது வரைக்கும் பவுல் குணப்படுத்தவில்லை
அவரை (பிலி. 2: 25-30).
கடவுள்
மீது நம்பிக்கை வைக்கவும்,
விடாமுயற்சியுடன் ஜெபிக்கவும் நிச்சயமாக நாம் கற்பிக்கப்படுகிறோம்.
நோய்வாய்ப்பட்டவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் (1 பேதுரு 5:7; பிலி. 4:6; 3 யோ. 2).
மருத்துவ
சிகிச்சை பெறுவது தவறு என்று புதிய ஏற்பாடு கற்பிக்கவில்லை.
குணப்படுத்தும்
மூலிகைகள் மற்றும் மருந்துகள் கடவுளின் படைப்பின் ஒரு பகுதியாகும். தேவன் மனிதனுக்கு கொடுத்த அறிவு மற்றும் ஞானத்தை
வைத்தும் தேவன் படைத்த வஸ்துக்களை வைத்துமே மருந்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கீலேயாத்திலே
பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என்
ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
எரே. 8:22
மருத்துவ
காரணங்களுக்காக மக்களால் பயன்படுத்தப்பட்ட பல தாவர தயாரிப்புகளை வேதம் குறிப்பிடுகிறது.
அத்தகைய
பயன்பாடு பாவம் என்று பெயரிடப்படவில்லை.
தற்போது
உள்ளது போல மாத்திரரையாக ஊசியாக மருந்துகள் தயாரிக்கப்படாத ஆதி காலங்களில் – இயற்கை
வளங்களான கற்றாழை, சோம்பு, கீலேயாத்தின் தைலம், சீரகம்,
அத்தி, களிம்பு, ஒலிவ
எண்ணெய், திராட்சை ரசம் போன்றவை நேரடியாக வைத்தியத்திற்கு
உபயோகப்படுத்தினர் – 1தீமோ. 5:23.
வயிற்று
வலி தீர – முழங்கால் போட்டு ஒழுங்கா ஜெபம் பண்ணு என்று தீமோத்தேயுவிற்கு பவுல்
அறிவுரை சொல்லாமல் – கொஞ்சம் திராட்சை ரசம் குடி என்றார் – வயிற்றுவலி நிவாரணி !!
1தீமோ. 5:23.
கொப்பளங்களால்
அவனுடைய துன்பத்தைத் தணிக்க,
யோபு சாம்பலில் உட்கார்ந்து, அவனது கொதிப்பை
ஒரு பானைச்சிரட்டையால் தடவிக்கொண்டார் (யோபு 2: 7-8).
உடலைக்
குணப்படுத்துவதற்கு மருந்தைப் பயன்படுத்துவது பாவமாக இருந்தால், நீதிமொழிகள் 17:22ல்
உள்ளதைப் போல தேவன் அத்தகைய வார்த்தையை நல்ல அர்த்தத்தில் பயன்படுத்த மாட்டார்.
எசே.
47:12 மற்றும் வெளி. 22:2 ஆகியவையும் ஒப்பிடுங்கள்.
இயேசு
சொன்னார், "ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அல்ல நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவர்
தேவை என்றார்" (லூக்கா 5:31).
இயேசு
கிறிஸ்து கூறிய உவமையில் நல்ல சமாரியன் காயமடைந்த மனிதனின் காயங்களுக்கு எண்ணெய்
மற்றும் திராட்சை ரசத்தை ஊற்றி அந்த காயங்களைக் கட்டினார். மேலும் விடுதியாளரிடம், "அவரை
கவனித்துக் கொள்ளுங்கள்" என்பதையும் (லூக்கா 10: 29-37) உவமையாக சொல்கிறார் –
இதில் மருந்து கொடுப்பது கண்டிக்கப்பட்டதோ?
பவுல்
லூக்காவை "பிரியமான மருத்துவர்" என்று குறிப்பிடுகிறார் (கொலோ. 4:14)
நம்முடைய
சரீரம் பரிசுத்த ஆவியானவர் வசிக்கும் ஆலயம். அதை நாம் பேணி காக்க வேண்டும். 1கொரி.
3:16, 6:19
இந்த
சரீரம் கிறிஸ்துவின் விலையேற்ப்பெற்ற இரத்தத்தால் வாங்கப்பட்டது. அதை நாம்
கவனிக்காமல் உதாசீனப்படுத்தலாமா?
1கொரி. 6:20
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
Completely ignoring medicine is not wise. God helped people create anti-dotes and medicine. But we shouldn't completely rely on this, God's mercy is surely needed
பதிலளிநீக்கு