வெள்ளி, 17 ஏப்ரல், 2020

#882 - உலகத்தாரோடு நாம் கொண்டிருக்கும் நட்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை வேதத்தில் இருந்து விளக்கி கூறுங்கள்.

#882 - *உலகத்தாரோடு நாம் கொண்டிருக்கும் நட்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை வேதத்தில் இருந்து விளக்கிக் கூறுங்கள்*.

*பதில்*
பரலோக இராஜ்ஜியம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது என்றார் நம் ஆண்டவர் ஒரு உவமையில். மத். 13:33

நாம் உலகத்தாரோடு கலந்திருப்பது சத்தியத்தை அவர்கள் மத்தியில் கொண்டு செல்ல ஏதுவாகும். 1கொரி. 5:10

(பாவிகளை) உலகத்தை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தாரல்லவா – லூக்கா 5:32

கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் – அநேக நேரம் அவர் பாவிகளோடு (உலகத்தாரோடு) சஞ்சரித்தார் – மாற்கு 2:16

பரிசுத்தவான்களாகிய நாம் – நம்முடைய இரட்சிப்பை அவர்களுக்குள் எடுத்து செல்லவேண்டியது நம்முடைய கடமை.

உலகத்தாரோடு நின்று சுவிசேஷம் சொல்கிறேனென்று அவர்களில் ஒருவனாக விழுந்து விடாமல் சொந்த இரட்சிப்பை காத்துக்கொள்வது மிக மிக அவசியம் – 1கொரி. 10:12, உபா. 18:9

மிக முக்கியமாக – உலகத்தாரைக்காட்டிலும் ஆபத்தானவர்கள் – சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. 1 கொரி. 5:11

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக