#877 - *மண்ணில் குழி தோண்டி இயேசுவின் சரீரத்தை புதைத்ததாக இல்லை. புதைக்காமல், சுகந்தவர்க்கமிட்டு கல்லறையில் வைப்பது தான் யூதர்களின் முறையாக உள்ளதா?*
மத்தேயு
27:60, மாற்15:46, லூக்23:55, யோவா19:42 இந்த நான்கு சுவிசேஷமும், இயேசு சிலுவையில்
மரித்தப்பின், கல்லறையில் வைத்ததாக தான் வாசிக்கின்றோம்.
மண்ணில்
குழி தோண்டி இயேசுவின் சரீரத்தை புதைத்ததாக இல்லை. புதைக்காமல், சுகந்தவர்க்கமிட்டு
கல்லறையில் வைப்பது தான் யூதர்களின் முறையாக உள்ளதா?
*பதில்*
பெயரிலேயே
இருப்பது போல் இயேசுவை கல்லறையில் தான் வைத்தார்கள்.
பல
சரியான பெயர்களில் தவறானவற்றை அறியாமலேயே எப்படி கிறிஸ்தவ மதம் பின்பற்றுகிறதோ –
அதில் இதுவும் ஒன்று !!
கல்லறை
என்று சொல்லிக்கொண்டு நாம் மண்ணறையில் புதைக்கிறோம் !!
தங்கள்
குடும்பத்திற்கென்று (கல் அறை) மலையில் அறை போல குடைந்து ஒரு குகையை தாங்கள்
உயிரோடு இருக்கும் போதே வாங்கி வைத்துக்கொள்வது பணக்கார (எபிரேயரின்) வழக்கம். ஆதி
23:4, 6, 9, 20, 49:30, 50:5,13
வீடுகளுக்கு
கதவு உள்ளது போல கல்லறையின் வாயிலில் அவ்வகை கல்லை கொண்டே அடைத்து விடுவார்கள். யோ
20:1
சில
மாதங்கள் ஆனதும் சரீரம் மக்கிப்போய் எலும்புக்கூடுகள் தான் இருக்கும்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே கல்லறையை உபயோகிப்பார்கள் – 2சாமு 2:32
ஆகவே
தான் யோசேப்பின் எலும்புகளை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டு போக முடிந்தது – யாத்
13:19
அவரவர்
வசதிக்கேற்ப – கல்லறையின் அளவு வேறுபடுகிறது. சிலர் பெரிய அளவில் செய்திருப்பர்.
அதற்கு பொிய வாயில் அவசியம். சரீரம் வைத்து கல்லை வாயிலில் அடைத்ததும் இறந்த
சரீரம் வாடை வீசாமல் இருக்க கந்தவர்க்கங்களை இடுவார்கள். சரீரத்தோடு வைப்பது
மாத்திரமல்லாமல் பின்நாட்களிலும் வைக்கும் பழக்கம் உண்டு. லூக்கா 24:1, 23:56,
மாற்கு 14:3-8 (படத்தைப் பார்க்கவும்)
பின்நாட்களில்
கந்தவர்க்கம் இடும்படி ஜன்னல் போல ஒரு சிறிய துவாரமும் வாயிலின் அருகே
வைத்திருப்பார்கள். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் வாயில் கல்லை திறந்து உள்ளே போய்
கந்தவர்க்கமிட அவசியமில்லாமல் வெளியில் இருந்தே வைத்து கடந்து செல்ல முடியும். (படத்தைப்
பார்க்கவும்)
இந்த
படங்கள் – இயேசு கிறிஸ்து அடக்கம் பண்ணப்பட்ட இடம் என்று எருசலேம் கொல்கதா மலையின்
அருகே இங்கிலாந்து அரசாங்கத்தின் பொறுப்பில் பாதுகாக்கப்ட்டு வருகிறது. 2014ல்
நான் நேரில் காணும் வாய்ப்பை பெற்றேன். அதன் படங்கள் தான் இவைகள்.
தனக்கென்று
ஒரு கல்லறையை தான் சொந்தமாக வாங்கி தயாராக வைத்திராவிட்டாலும் இயேசு கிறிஸ்து
செல்வந்தரோடே அடக்கம் பண்ணப்படுவார் என்ற தீர்க்கதரிசனம் நினைவு உள்ளதா? இயேசு
கிறிஸ்துவிற்காக தன் கல்லறையை ஒதுக்கிதந்த ஒரு யோசேப்பின் ஒரு வீடு போல உள்ள
கல்லறை இது. அந்த காலத்தில் இவ்வளவு பெரிய குகை வாங்குவதென்றால் எவ்வளவு தொகை
தேவைப்படும் என்பதை யோசித்துப்பாருங்கள்.. மாற்கு 15:43, மத் 27:57-60, ஏசா 53:9
நாம்
தற்போது சரீரத்தை அடக்கம் செய்வது யூதர்களை போல கிடைமட்ட (Horizontal) ரீதியில் அறையில்
அல்ல - பூமியை தோண்டி செங்குத்தாக (Vertical) கீழே சரீரத்தை கிடைமட்டமாக கிடத்தி
மண்ணை மூடிவிடுகிறோம். மண்ணுக்கு மண்ணாக ஒன்றாகி விடுகிறது. சரியாய் சொல்லவேண்டுமானால்
அது மண்ணறை என்று அழைக்கப்படலாம்.
உங்கள்
கேள்வியில் 4 சுவிசேஷம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
சுவிசேஷம்
என்பது ஒன்று தான் (1கொரி 15:1-5). அது கிறிஸ்துவின் மரணம்-அடக்கம்-உயிர்தெழுதலை
குறித்த செய்தி. மத்தேயு, மாற்கு, லூக்கா &
யோவான் – 4 *சுவிசேஷ புத்தகங்கள்* !!
இந்த
அருமையான கேள்விக்காய் என் மனமார்ந்த நன்றிகள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக