#876 - *ஜெபம் என்றால் என்ன? உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்றால் இதன் அர்த்தம்?? ஏன் இப்படி ஜெபிக்கனும்?*
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள்
பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; விளக்கவும்
*பதில்*
*1) ஜெபம் என்றால் என்ன?*
ஜெபம்
என்பது துதிகளுடன் கூடிய விண்ணப்பம்.
சீஷர்கள்
ஜெபிக்க கற்றுக்கொடுக்கும்படி இயேசுவிடம் கேட்டார்கள்
- லூக். 11: 1-4
*ஜெபம் என்பது என்ன என்று* 1 தீமோ. 2: 1-3 ல்
தெளிவாக காணமுடியும்.
1.
வேண்டுதல் - ஒரு தேவை தொடர்பான கோரிக்கை
2.
ஜெபம் – தொழுகை
3.
பரிந்துரை - ஒரு நேர்காணல், ஒரு கோரிக்கை
4.
நன்றி செலுத்துதல் - நன்றி
*பிலிப்பியர்
4: 6ல் நாம் காண்பது*: (நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய
ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்)
1. ஜெபம்
– வணங்கும்படி
2.
வேண்டுதல் - ஒரு கோரிக்கை வைக்க
3.
நன்றி செலுத்த
தேவனைப் பின்பற்றுபவர்கள் படைப்பாளருடன் பேசுவதற்கான முதன்மை வழி இது.
யாக்கோபு 4: 2.
இயேசுவின்
பெயரில் (கட்டளையின்படி) கேட்கவேண்டும் - யோவான் 16:23-24
மற்றவர்களுக்காக
விண்ணப்பிக்க வேண்டும் - 2 கொரி.
1:11
நாம்
மற்றவர்களுடன் செய்த தவற்றிற்கான மன்னிப்பைக் கேட்டு பின்னர் தேவனிடம் ஜெபிக்க
வேண்டும் - யாக்கோபு 5:16
தேவனை
வாழ்த்தி ஜெபிக்க வேண்டும் –
1 சாமு. 2: 1-10, சங். 66: 19-20
அவர்
நமக்கு செய்த காரியங்களுக்காக நன்றி சொல்லி ஜெபிக்க
வேண்டும் – 1தெச. 5:18
ஒற்றுமையை
பெற ஜெபிக்க வேண்டும் - யாக்கோபு 4: 8-10
நம்பிக்கையுடன்
அணுகவும் - எபே. 3:12
2) *உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்றால் இதன் அர்த்தம்?? ஏன் இப்படி ஜெபிக்கனும்*?
சுத்தம்
என்றால் அதற்கு அர்த்தம் அழுக்கற்றது என்பது.
பரிசுத்தம்
என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் – தூய்மை, துப்புரவு, மாசின்மை
அல்லது புனிதம் என்று பொருள். (அகராதி குறிப்பு : வடசொல் தமிழ் அகர வரிசை
சுருக்கம், 1937ம் பதிப்பு)
3
என்பது தெய்வத்தன்மையை குறிக்கும் எண்.
எபிரேய
சரித்திரப்படி மூன்று முறை ஒரு விஷயத்தை சொன்னால் அதற்கு மாற்றுக்கருத்தே
கிடையாது. முற்றிலும் முழுவதும் என்று அதன் பொருள்.
நம்
தேவன் பரிசுத்தர் மாத்திரம் அல்ல – அவர் *பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்* என்று
மூன்று முறை அவரை குறித்து ஒரே இடத்தில் சொல்லப்படுகிறது. ஏசா. 6:3.
அப்பேற்பட்ட
பரிசுத்தருக்கு எந்த நிகரும் யாரும் எவரும் இல்லை.
உம்முடைய
நாமம் பரிசுத்தப்படுவதாக என்ற வரியானது – உண்மையில், "உமது பெயர் கொண்டாடப்பட வேண்டும்,
வணங்கப்பட வேண்டும், எல்லா இடங்களிலும் புனிதமாக
மதிக்கப்படட்டும், எல்லா மக்களிடமிருந்தும் சரியான மரியாதை
பெறட்டும்." என்பதே.
கடவுளே, நீர் எல்லா
இடங்களிலும் சரியான வணக்கத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பது வழிபாட்டாளரின் ஒரு
விருப்பத்தின் அல்லது விருப்பத்தின் வெளிப்பாடாகும்.
ஆங்கிலத்தில்
இந்த வசனத்தை வாசிக்கும்போது இன்னும் தெளிவுபெறும்.
(KJV) After
this manner therefore pray ye: Our Father which art in heaven, Hallowed be thy
name.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக